/* */

வேலூர் ஜெயிலில் பரோல் கேட்டு முருகன் உண்ணாவிரதம்

30 நாள் பரோல் வழங்கக்கோரி வேலூர் ஜெயிலில் முருகன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

HIGHLIGHTS

வேலூர் ஜெயிலில் பரோல் கேட்டு முருகன் உண்ணாவிரதம்
X

கைதி முருகன் 

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது மனைவி நளினி பெண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தார். தற்போது பரோலில் வெளியே வந்துள்ள அவர் காட்பாடி பிரம்மபுரத்தில் தங்கியுள்ளார்.

இந்த வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பேரறிவாளன் பரோலில் வெளியே வந்துள்ளார். அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. முருகன் பரோல் கேட்டு சட்ட போராட்டம் நடத்தி வருகிறார். அவருக்கு பரோல் வழங்கப்படவில்லை.

இதனால் விரக்தியடைந்த அவர் காலை உணவு சாப்பிட மறுத்தார். பரோல் கிடைக்கும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அவர் தெரிவித்துள்ளார். அவரிடம் சிறைத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் அவர் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

முருகன் பரோல் கேட்டு விண்ணப்பித்தது தொடர்பாக அரசு மற்றும் கோர்ட்டு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி முருகன் 5வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். தனக்கு 30 நாள் பரோல் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து தண்ணீர் கூட அருந்தாமல் இருக்கிறார். இன்று காலை மயக்கமானதால் அவருக்கு டாக்டர்கள் மருத்துவ பரிசோதனை செய்தனர்.

Updated On: 5 May 2022 1:01 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    திருப்தி மேற்கோள்கள் ஆங்கிலத்தில் அறிவோமா?
  2. திருவள்ளூர்
    திருவள்ளூரில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்த முன்னாள் அமைச்சர் ரமணா
  3. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் இடைநின்ற மாணவர்களை பள்ளிக்கு வரவைக்க நடவடிக்கை
  4. லைஃப்ஸ்டைல்
    எனக்குள் நீ ; உனக்குள் நான்..! தொடர்வோம் இனிதே இணைந்து..!
  5. லைஃப்ஸ்டைல்
    அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே.. நண்பனே.. நண்பனே...!
  6. நாமக்கல்
    கோர்ட் உத்தரவின்படி இழப்பீடு செலுத்ததாத கான்ட்ராக்டர் நுகர்வோர்...
  7. லைஃப்ஸ்டைல்
    சொத்து இல்லைன்னாலும் கெத்து இருக்கணும்..!
  8. லைஃப்ஸ்டைல்
    கோடைக் காலத்துல ஈஸியா எடையை குறைக்கலாம்! எப்படி தெரியுமா?
  9. தொண்டாமுத்தூர்
    நகை பறிப்பு, திருட்டு கொள்ளை சம்பவங்கள் கோவையில் அதிகரித்துள்ளது :...
  10. லைஃப்ஸ்டைல்
    வீரர்கள் சாப்பிடும் ஊட்டச்சத்து மிக்க உணவுகள் எவை தெரியுமா?