/* */

தண்ணீரில் ஓடும் பைக் கண்டுபிடித்த மாணவன் : நம்ம ஊரு ஹீரோ

பெட்ரோலுக்கு மாற்றாக தண்ணீரில் ஓடும் இருசக்கர வாகனத்தை கண்டுபிடித்த வேலூரை சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர் மகேந்திரன்

HIGHLIGHTS

தண்ணீரில் ஓடும் பைக் கண்டுபிடித்த மாணவன் :  நம்ம ஊரு ஹீரோ
X

 மாணவனின் கண்டுபிடிப்பை வேலூர் விஐடியில் நடந்த நாளைய விஞ்ஞானி என்ற நிகழ்ச்சியில் பார்த்து வியந்த விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை

வெற்றியாளர்கள் வித்தியாசமான செயல்களை செய்வதில்லை, அவர்கள் தாங்கள் செய்வதையே வித்தியாசமாக செய்கின்றனர் என்ற சொல்லாடலுக்கு உதாரணமாக வேலூர் அருகே உள்ள சித்தேரி கிராமத்தை சேர்ந்த மாணவன் விளங்குகிறார்.

சித்தேரி கிராமத்தை சேர்ந்த பால் வியாபாரி தசரதன் என்பவரது மகன் தேவேந்திரன் தான் அந்த சாதனையாளர். ஒருநாள் தனது தந்தையின் மொபட்டை எடுத்து தேவேந்திரன் ஓட்ட முயற்சிக்க, அதை பார்த்த அவரது தந்தை 'வண்டி என்ன தண்ணியிலா ஓடுது? பெட்ரோலை வேஸ்ட் செய்யாதே' என்று கண்டித்தாராம்.

சாதாரணமானவர்களுக்கும் சாதாரண மாணவர்களுக்கும் இது கடுப்பேற்றும் சொல். ஆனால், சாதனையாளர்களுக்கோ புதிய கண்டுபிடிப்பிற்கான ஊக்க சொல். அதை கேட்ட நொடிதான் தண்ணீரில் வண்டியை ஓட வைக்கும் தொழில்நுட்பத்தை கண்டறிந்தால் என்ன? என்று நினைக்க வைத்து அதற்கு செயல்வடிவமும் கொடுக்க வைத்தது.

தேவேந்திரன் பென்னாத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்றவர். பள்ளி பருவத்தில் இருந்தே இயற்பியல், வேதியியல் மீதான தனது ஆர்வத்தை பல வகைகளில் சோதிக்க முயற்சித்து வந்திருக்கிறார். தனது மகனின் அறிவியல் ஆர்வத்துக்கு ஊக்கமளித்து வந்துள்ளார் அவரது தந்தை தசரதன். தந்தை கூறிய, 'வண்டி தண்ணீராலா ஓடுது? என்ற அந்த ஒரு வார்த்தை தான் பெட்ரோலுக்கு மாற்றாக தண்ணீரில் இருசக்கர வாகனத்தை ஓட வைக்கும் புதிய தொழில்நுட்பத்தை கண்டறிய தூண்டியது.

இவரது இந்த ஊக்கத்துக்கு பள்ளி தலைமை ஆசிரியர் உமாதேவன், உதவி தலைமை ஆசிரியர் பாலாஜி, ஆசிரியர்கள் என்.கோட்டீஸ்வரி, ஜி.மஞ்சுளா ஆகியோர் மேலும் வலு சேர்த்தனர். பெட்ரோலுக்கு மாற்றாக தண்ணீரை நிச்சயம் எரிபொருளாக பயன்படுத்த முடியும் என்ற உறுதியுடன், ஆசிரியர்களின் தகுந்த ஆலோசனையுடன் தண்ணீரில் இருந்து ஹைட்ரஜனையும், ஆக்சிஜனையும் பிரித்து எரிபொருளாக பயன்படுத்த எடுத்த முயற்சியில் மாணவர் தேவேந்திரன் வெற்றி கண்டார்.

முதலில், தண்ணீரில் ஹைட்ரஜனை பிரித்து அதை வாகன இன்ஜினுக்கு நேரடியாக அனுப்பி சோதித்து பார்த்தனர். கண்ணாடி பாட்டிலில் ஹைட்ரஜனை பிரித்தபோது உஷ்ணமாகி உருகியதால், கனமான பிளாஸ்டிக் பால் கேனை பயன்படுத்தினார். இதன் மூலம் அதிக சூடாகும் பிரச்னைக்கு தீர்வு கிடைத்தது.

அலுமினியம், ரப்பர், துத்தநாக தகடுகள் கொண்ட வரிசைகள் அடங்கிய 'டிரைசெல்' அமைப்பில் தண்ணீரை வேகமாக செலுத்தி மின்னூட்டம் வழங்கியபோது தண்ணீரில் இருந்து ஹைட்ரஜன் பிரிக்கப்பட்டு அதை மீண்டும் தண்ணீர் கேனுக்கு கொண்டு செல்லும் வடிவமைப்புக்கு பள்ளி ஆசிரியர்கள் வடிவம் கொடுத்தனர்.

ஒரு லிட்டர் தண்ணீரில் 3 ஸ்பூன் உப்பை சேர்த்ததால் அது வினையூக்கியாக மாறி ஹைட்ரஜனை பிரித்து எரிசக்தியாக மாற்றி வாகனத்தை இயக்கியது. வாகனத்திலிருந்து வெளியேறும் ஆக்சிஜனால் சுற்றுச்சூழலுக்கும் மாசில்லாததுடன், சுத்தமான ஆக்சிஜன் கிடைப்பதற்கான வழியும் கிடைத்துள்ளது.

இதனை உருவாக்க மொத்த செலவே ரூ.1,500தான் ஆனதாக மாணவர் கூறினார். ஹைட்ரஜனை பிரித்தெடுக்கும் டிரைசெல் அமைப்பு செயல்படுவதற்கான பேட்டரிக்கு ரூ.1,000 செலவானதாம். பெட்ரோல் மூலம் வாகனம் எத்தனை கி.மீ வேகம் செல்லுமோ, லிட்டருக்கு எவ்வளவு மைலேஜ் தருமோ அதே அளவு தருவதாக மாணவர் கூறினார்.

இவரது கண்டுபிடிப்பை தேசிய வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி மன்ற தலைவர் மங்கல்யான் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை வேலூர் விஐடியில் நடந்த நாளைய விஞ்ஞானி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பார்த்து வியந்ததுடன், மாணவனின் கண்டுபிடிப்பை அங்கீகரிக்கும் அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்திருக்கிறார்.

மேலும், மாநில, தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சிகளில் தனது படைப்பை சமர்ப்பித்து விருதுகளையும், சான்றிதழ்களையும், பதக்கங்களையும் குவித்துள்ளார் மாணவர் தேவேந்திரன். மாநில அளவிலான கண்காட்சியில் இவருக்கு விருதுடன், ₹50 ஆயிரம் ரொக்கப்பரிசும் கிடைத்திருக்கிறது. அதோடு விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன், மாணவர் தேவேந்திரனின் கண்டுபிடிப்புக்கு காப்புரிமைபெறவும், அடுத்தக்கட்ட ஆராய்ச்சிக்கு உதவவும் உறுதி அளித்திருப்பதுடன், தண்ணீரில் இயங்கும் ஜெனரேட்டரை உருவாக்குவதற்கான உதவிகளை மாணவனுக்கு அளித்துள்ளார்.

இது போன்ற சாதனை படைத்த மாணவனை நம்ம ஊர் ஹீரோவாக அணைக்கட்டு தொகுதிக்கு அறிவிப்பதில் பெருமை கொள்கிறோம்

Updated On: 22 Dec 2021 4:52 PM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்
  7. ஈரோடு
    கோடை வெயில்: ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தொமுச சார்பில் மாபெரும் மே தின ஊர்வலம்
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 46 கன அடியாக சரிவு
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு