/* */

அணைக்கட்டு அருகே கல்லுட்டை கிராமத்தில் கால்வாயில் பாலம் அமைக்க கோரிக்கை

அணைக்கட்டு அருகே பல ஆண்டுகளாக ஆற்றுக்கால்வாய் தண்ணீரில் இறங்கி சடலத்தை தூக்கி செல்வதால் கால்வாயில் பாலம் அமைக்க கோரிக்கை

HIGHLIGHTS

அணைக்கட்டு அருகே கல்லுட்டை கிராமத்தில் கால்வாயில் பாலம் அமைக்க கோரிக்கை
X

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா ஒடுகத்தூர் அடுத்த கல்லுட்டை கிராமத்தில் 100 க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர் . இந்த கிராமத்தில் யாராவது இறந்தால் உத்திரகாவேரி ஆற்றின் கால்வாயை கடந்து சேர்ப்பாடி ஆற்றங்கரையோரமுள்ள மயானத்தில் அடக்கம் செய்து வருகின்றனர் .

கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த கனமழை காரணமாக உத்தர காவேரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கால்வாய் அதிகளவு தண்ணீர் செல்கிறது . இதனால் அங்கு வசிக்கும் மக்கள் ஆற்றுக் கால்வாயை கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது . கால்வாயில் கட்டப்பட்டுள்ள தடுப்பணை அருகே தேங்கியுள்ள அதிகளவு தண்ணீரில் இறங்கி ஆபத்தான நிலையில் பொதுமக்கள் சென்று வருகின்றனர்.

இந்நிலையில் கல்லுட்டை பகுதியை சேர்ந்த மூதாட்டி பட்டம்மாள் ( 90 ) என்பவர் வயது மூப்பால் இறந்தார் . அவரது சடலத்தை மாலை மயானத்திற்கு தூக்கிச்சென்றனர் . அப்போது , உத்திரகாவேரி ஆற்றுக் கால்வாயில் தேங்கியுள்ள மார்பளவு தண்ணீரில் இறங்கி சேறும், சகதியில் சிக்கி இறங்கி ஆபத்தான நிலையில் சடலத்தை தூக்கிச்சென்று அடக்கம் செய்தனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், மழைக்காலங்களில் ஆற்றுக்கால்வாயில் தண்ணீர் செல்லும்போது, ஊரில் இறந்தவர்களின் சடலத்தை மயானத்திற்கு கொண்டு செல்வதில் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறோம். ஆபத்தான நிலையில் கால்வாயை கடந்து செல்லவேண்டியுள்ளது . பல ஆண்டுகளாக நீடிக்கும் இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும் விதமாக கால்வாயில் மேம்பாலம் அமைக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 21 July 2021 3:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காதலை ஆரத்தழுவி காலைப்பொழுதுக்கு ஒரு வணக்கம்..!
  2. திருப்பூர்
    போதைப் பொருள்களை ஒழிக்க மக்களின் போராட்டமே தீா்வு; இந்து முன்னணி...
  3. திருப்பூர்
    வெள்ளக்கோவில் நகராட்சி; ஒரே நாளில் ரூ.1 கோடி வரி வசூல் செய்து சாதனை
  4. லைஃப்ஸ்டைல்
    கொரோனா ஒன்றே போதும் செவிலியர் புகழ் பாட..!
  5. லைஃப்ஸ்டைல்
    6th wedding anniversary quotes- 6 வருட திருமண வாழ்க்கையின் வெற்றிக்கான...
  6. தூத்துக்குடி
    விரைவில் தூத்துக்குடி பாலக்காடு விரைவு ரயில் சேவை!
  7. அரசியல்
    மோடி என்ன தான் சொன்னார்..? தெளிவாக புரிந்து கொள்ளுங்கள்..!
  8. குமாரபாளையம்
    ராமர், சீதா திருக்கல்யாண வைபோகம்
  9. மயிலாடுதுறை
    நடுக்கடலில் ரு தரப்பு மீனவர்கள் சண்டை! இருவர் காயம்
  10. குமாரபாளையம்
    கோடை வெப்பம் சமாளிக்க நுங்கு, இளநீர், தர்பூசணி கடைகளை நாடிய