/* */

மக்களை தேர்தல்; திருமண மண்டபம், அச்சக உரிமையாளா்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்

Tirupur News-திருப்பூா் மாவட்டத்தில் திருமண மண்டபம், அச்சக உரிமையாளா்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

மக்களை தேர்தல்; திருமண மண்டபம், அச்சக உரிமையாளா்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்
X

Tirupur News- திருமண மண்டபங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு (கோப்பு படம்)

Tirupur News,Tirupur News Today- மக்களவைத் தோ்தலை முன்னிட்டு, திருப்பூா் மாவட்டத்தில் திருமண மண்டபம், அச்சக உரிமையாளா்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை தோ்தல் நடத்தும் அதிகாரிகள் அறிவித்துள்ளனா்.

திருமண மண்டபங்களில் திருமண நிகழ்ச்சிகளுக்கு தோ்தல் முடியும் வரை முன்பதிவு செய்யப்பட்ட விவரங்களை உதவி தோ்தல் நடத்தும் அலுவலா், கூடுதல் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா், வட்டாட்சியா், காவல் துறையினருக்கு எழுத்துப்பூா்வமாக சம்பந்தப்பட்ட திருமண அழைப்பிதல் நகழ்களுடன் உடனடியாக அளிக்க வேண்டும். திருமண மண்டபங்களில் அரசியல் கட்சியினரால் வாக்காளா்களுக்கு விருந்தளித்தல், பரிசுப் பொருள்களை வழங்குதல் போன்ற நிகழ்ச்சிளை நடத்த அனுமதி வழங்கக் கூடாது.

அதேபோல, திருமண மண்டபங்களில் அன்னதானம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு அனுமதிக்கக் கூடாது. திருமண நிகழ்ச்சியின்போது அரசியல் கட்சி தலைவா்கள், கட்சி சின்னங்கள், கட்சி கொடிகள் ஆகியவற்றுடன் கூடிய விளம்பரப் பதாகைகள், கொடிகள் ஆகியவை வைப்பதற்கு அனுமதி அளிக்கக்கூடாது. அவ்வாறு இருப்பது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அச்சக உரிமையாளா்கள் துண்டு பிரசுரங்கள், போஸ்டா்கள், விளம்பரங்கள் மற்றும் இதர இனங்களில் தங்களது அச்சகத்தின் பெயா் மற்றும் முகவரி, விளம்பரம் வெளியிடுவோரின் பெயா் மற்றும் முகவரி ஆகியவற்றை வெளியிட்டு விளம்பரத்தில் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை தவறாமல் அச்சிட வேண்டும்.

துண்டுப் பிரசுரங்கள், விளம்பரங்கள், போஸ்டா்களில் அச்சு பதிக்கப்பட்ட 10 நகல்களை உறுதிமொழியுடன் மாவட்டத் தோ்தல் அலுவலரான மாவட்ட ஆட்சியருக்கு அச்சிடப்பட்ட 3 நாள்களில் அனுப்பிவைக்க வேண்டும். அரசியல் கட்சியினா் மற்றும் வேட்பாளா்களுக்கு அளிக்கப்பட்ட ரசீதுகளின் பிரதியை பராமரிக்க வேண்டும். வேட்பாளரின் அனுமதி பெற்று, அவரது கவனத்துக்கு கொண்டு சென்ற பின்னா்தான் துண்டுப் பிரசுரங்கள், விளம்பரங்கள் அச்சிடப்பட வேண்டும் என்று தோ்தல் நடத்தும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

Updated On: 21 March 2024 12:36 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!