/* */

திருப்பூரில் கிரிக்கெட் மட்டையால் அடித்து மாமனார் கொலை; மருமகன் குடும்பத்தினர் தலைமறைவு

Tirupur News,Tirupur News Today- திருப்பூரில் குடும்பத் தகராறில், சமரசம் பேச வந்த மருமகன் குடும்பத்தினர், மாமனாரை கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்துவிட்டு, தப்பியோடினர். தலைமறைவான அவர்களை பிடிக்க போலீசார் தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

திருப்பூரில் கிரிக்கெட் மட்டையால் அடித்து மாமனார் கொலை; மருமகன் குடும்பத்தினர் தலைமறைவு
X

Tirupur News,Tirupur News Today- திருப்பூரில் இறைச்சி கடைக்காரர் கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொலை (மாதிரி படம்)

Tirupur News,Tirupur News Today- திருப்பூரில் இறைச்சி கடைக்காரர் கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். குடும்பத் தகராறு குறித்து பேச வந்தபோது ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்தது, அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மதுரை மாவட்டம் நாச்சிக்குளத்தை சேர்ந்தவர் சலீம் முகமது (வயது 45). இவருடைய மனைவி மும்தாஜ். இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். முகமது சலீம் மனைவி மற்றும் மகள்களுடன் திருப்பூர் பி.என்.ரோடு போயம்பாளையத்தை அடுத்த ராஜாநகரில் வசித்து வந்தார். மேலும் அவர் அந்த பகுதியில் இறைச்சிக்கடை நடத்தி வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சலீம் முகமதுவின் மூத்த மகளான ஷகீலா பானுவுக்கும், திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த முகமது மீரான் என்பவரின் மகன் ஷபிபுல்லா என்பவருக்கும் திருமணம் நடந்தது. ஆனால் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஷகீலாபானு ரம்ஜான் பண்டிகை முதல் திருப்பூரில் உள்ள பெற்றோர் வீட்டில் இருந்து வந்தார்.

இந்நிலையில் குடும்பத்தகராறு காரணமாக சமரச பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஷபிபுல்லா, அவருடைய தந்தை முகமது மீரான், தம்பி அயூப்கான், சகோதரி சபீனா ஆகியோர் திண்டுக்கல்லில் இருந்து நேற்று திருப்பூர் போயம்பாளையத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் 4 பேரும் சலீம் முகமதுவை அவருடைய வீட்டில் வைத்து சந்தித்து பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஷபிபுல்லா உள்ளிட்ட 4 பேரும் வீட்டில் இருந்த கிரிக்கெட் மட்டையால் சலீம் முகமதுவின் தலையில் ஓங்கி அடித்துள்ளனர். இதில் பலத்த காயமடைந்து கீழே சாய்ந்த அவர் அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தடுக்க வந்த மும்தாஜூம் இதில் படுகாயமடைந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த ஷபிபுல்லா மற்றும் அவருடைய குடும்பத்தினர் 4 பேரும் அங்கிருந்து உடனடியாக தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சலீம் முகமதுவின் உடலை திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலை செய்துவிட்டு தலைமறைவான 4 பேரை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். குடும்பத்தகராறு குறித்து பேச வந்த மருமகன் குடும்பத்தினர், இறைச்சி கடைக்காரரை கிரிக்கெட் மட்டையால் அடித்துக்கொலை செய்தது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Updated On: 31 May 2023 2:43 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தூக்கமின்மைக்குத் தீர்வளிக்கும் உணவுகள்
  2. லைஃப்ஸ்டைல்
    அனுபவ வயல்களின் அறுவடை, முதிர்ச்சி..!
  3. ஆன்மீகம்
    அளவற்ற அன்பை அள்ளித் தருபவர் நபிகள் நாயகம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    குற்றப்பரம்பரை சட்டத்துக்கு எதிராக போராடிய முத்துராமலிங்க தேவர்..!
  5. லைஃப்ஸ்டைல்
    ஓய்வு என்பது வாழ்க்கையின் 2ம் குழந்தை பருவம்..!
  6. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  7. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  8. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  9. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  10. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?