/* */

காங்கயம் அருகே அதிகாரிகள் என மிரட்டி, மளிகைக்கடையில் பணம் பறித்த தம்பதி கைது

Tirupur News- காங்கயம் அருகே, மளிகைக்கடைக்கு வந்த கணவன்- மனைவி, அங்கிருந்த பெண்ணிடம் அதிகாரிகள் என மிரட்டி பணம் பறித்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

காங்கயம் அருகே அதிகாரிகள் என மிரட்டி, மளிகைக்கடையில் பணம் பறித்த தம்பதி கைது
X

Tirupur News- காங்கயம் அருகே, மளிகை கடையில் இருந்த பெண்ணை மிரட்டி பணம் பறித்த தம்பதி கைது (கோப்பு படம்)

திருப்பூர் மாவட்டம், காங்கயம் தாராபுரம் சாலை களிமேடு பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருபவர் சிவசாமி. இவரது மனைவி தனலட்சுமி (வயது 43). தனலட்சுமி கடையில் இருந்தபோது அவரது கடைக்கு ஒரு ஆண் மற்றும் பெண் ஒருவர் காரில் வந்தனர்.

அவர்கள் நாங்கள் கோவை மண்டல மாநகராட்சி உணவு பாதுகாப்பு துறை அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் என கூறியதுடன், உங்கள் கடையில் பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்து கிறீர்களா, புகையிலைப்பொருட்கள் பயன்படுத்துகிறீர்களா என பல்வேறு கேள்விகளை கேட்டனர். மேலும் ரூ.2 ஆயிரத்து 500 பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். இதனால் பதறிப்போன தனலட்சுமி கடையில் இருந்த பணம் ரூ.2500-ஐ அவர்களிடம் கொடுத்துள்ளார். பணத்தை வாங்கி கொண்டு அந்த 2 பேரும் காரில் ஏறி சென்றுவிட்டனர்.

இதில் சந்தேகம் அடைந்த தனலட்சுமி அக்கம் பக்கத்தில் உள்ள கடைகளில் விசாரித்து பார்த்துள்ளார். அப்போது மற்ற கடைகளுக்கு இதுபோல் கூறி யாரும் வரவில்லை என கூறியதை அடுத்து தனலட்சுமி தனது கணவரிடம் தெரிவித்தார். பின்னர் காங்கயம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தனர்.

இந்த புகாரை தொடர்ந்து காங்கயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை பறித்து சென்ற நபர்களை தேடி வந்தனர். தொடர்ந்து அவர்கள் வந்த கார் எண்ணை வைத்து தேடி வந்தனர்.

அப்போது உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் என ஏமாற்றி பணம் பறித்து சென்றது கோவையை சேர்ந்த சக்திவேல்(24), அவரது மனைவி சத்தியபிரியா(23) என்பது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து கோவை சிறையில் அடைத்தனர். மேலும் அவர்கள் கூலி வேலைக்கு சென்று வந்ததுடன், இது போல் பணம் கேட்டு மிரட்டி பணம் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்த சம்பவம் காங்கயம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 18 Nov 2023 2:37 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  2. திருவண்ணாமலை
    மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  4. அவினாசி
    பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...
  5. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  6. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  7. திருவண்ணாமலை
    வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, ஆட்சியர் அறிவுரை
  8. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  9. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை