தாராபுரம் அரசு மருத்துவமனையில் நீதிபதிகள் திடீர் ஆய்வு

Tirupur News,Tirupur News Today-திருப்பூர் தாராபுரம் அரசு மருத்துவமனையில் நீதிபதிகள் பாலு, பாபு ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
தாராபுரம் அரசு மருத்துவமனையில் நீதிபதிகள் திடீர் ஆய்வு
X

Tirupur News,Tirupur News Today-தாராபுரம் அரசு மருத்துவமனையில், நீதிபதிகள் திடீர் ஆய்வு நடத்தினர்.  

Tirupur News,Tirupur News Today- தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி பாலு, தாராபுரம் குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி எஸ்.பாபு ஆகியோர் நேற்று மதியம் வந்தனர். பின்னர் தலைமை டாக்டர் சிவபாலன் மற்றும் டாக்டர் குழுவினருடன் மருத்துவமனையில் பெண்கள் பொது வார்டு, பிரசவ வார்டு, குழந்தைகள் வார்டு, ஆபரேஷன் தியேட்டர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது தாராபுரம் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் ‘போக்சோ’ வழக்கில் கைதானவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு வரும் போது குறிப்பாக 18 வயதுக்கு குறைவான சிறார்களுக்கு செய்யப்படும் மருத்துவ பரிசோதனைகள் குறித்து, டாக்டர்கள் குழுவினரிடம் நீதிபதிகள் கேட்டறிந்தனர்.

இதில் டாக்டர்கள் சத்யராஜ், பெரியசாமி, போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்புச் செல்வி, சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் கலந்து கொண்டனர். நீதிபதிகளின் ஆய்வை முன்னிட்டு போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானவேல் தலைமையில் அரசு மருத்துவமனையின் நுழைவு வாயில் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். திடீரென நீதிபதிகள், அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு நடத்தியது, அங்கிருந்த மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் நோயாளிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

தனியார் மருத்துவமனைகளை போலவே, அரசு மருத்துவமனைகளிலும் போதிய நவீன மருத்துவ தொழில்நுட்ப வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதனால், குறைந்த கட்டணத்தில் அல்லது சலுகை கட்டணத்தில் பல்வேறு நோய்களுக்கான சிகிச்சைகள் மற்றும் மருத்துவ பரிசோதனைகளை, அரசு மருத்துவமனைகளிலேயே செய்துகொள்ள முடிகிறது. எனவே, முன்பை காட்டிலும், இப்போது அரசு மருத்துவமனைகளை தேடி வரும் மக்கள் கூட்டம் அதிகரித்து விட்டது. பல அரசு மருத்துவமனைகளில், தனியார் மருத்துவமனைகளை காட்டிலும், சிறப்பான மருத்துவ சேவை மக்களுக்கு கிடைக்கிறது. நோயாளிகள் மீது, அதிக கவனம் செலுத்தி, சிகிச்சையளித்து குணப்படுத்துகின்றனர்.

தனியார் மருத்துவமனைகளில், பல லட்சம் ரூபாய் செலவில் குணப்படுத்தப்படும் நோய்களை, சில ஆயிரங்களிலேயே குணப்படுத்தும் அளவுக்கு, அரசு மருத்துவமனைகளில் நவீன மருத்துவ கருவிகள், லேட்டஸ்ட் டெக்னாலஜி எக்யூப்மென்ட்ஸ் மற்றும் அந்தந்த நோய் சிறப்பு பிரிவுகளுக்கான டாக்டர்கள், டெக்னீஷியன்கள், மருத்துவ ஊழியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு, தமிழக அரசு மருத்துவ சிகிச்சை முன் ஏற்பாடு நடவடிக்கைகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சுகாதார நலம், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக தற்போது உள்ள மா. சுப்ரமணியன், அரசு மருத்துவமனைகளின் மருத்துவ சேவைகளை மேம்படுத்துவதில், தீவிர கவனம் செலுத்தி, மாநிலம் முழுவதும் பயணம் செய்து, கள ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்தி வருகிறார்.

எனினும், சில மருத்துவமனைகளில் நோயாளிகளிடம் போதிய அக்கறையும், கவனமும் காட்டாத சில டாக்டர்கள், சில மருத்துவ ஊழியர்களால் அரசு மருத்துவமனைகளுக்கு அவப்பெயர் ஏற்படுகிறது. எனினும், இதுபோன்ற குறைகளை களைவதில், மருத்துவ பணிகள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் போதிய கவனம் செலுத்தி, அக்கறை காட்டி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Updated On: 19 March 2023 9:43 AM GMT

Related News

Latest News

 1. லைஃப்ஸ்டைல்
  பச்சிளங்குழந்தைகளுக்கு தேங்காய் எண்ணெய் மசாஜ்: பயன்படுத்தும் முறை
 2. ஈரோடு
  பவானி, அந்தியூரில் நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு
 3. காஞ்சிபுரம்
  காஞ்சிபுரம் மாநகராட்சி கூட்டத்தில் 97 தீர்மானங்கள் ஏகமனதாக
 4. காஞ்சிபுரம்
  காஞ்சிபுரம் அ.தி.மு.க. முன்னாள் செயலாளர் நினைவுதினத்தையொட்டி நல திட்ட...
 5. நாமக்கல்
  நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 பைசா சரிவு :ஒரு முட்டை விலை ரூ....
 6. திருப்பூர்
  திருப்பூரில் 49-வது சர்வதேச அளவிலான நிட் ஃபேர் கண்காட்சி துவக்கம்
 7. தேனி
  சென்னை- பெங்களூரு ஹைப்பர் லுாப் ரயில் ஆய்வு
 8. குமாரபாளையம்
  ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
 9. விழுப்புரம்
  இ- சேவை மையம் தொடங்க வாங்க: ஆட்சியர் தகவல்
 10. தேனி
  19,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய அக்சென்சர் ஐ.டி. நிறுவனம்...