/* */

சேவூரில் குப்பைக்கு தீ வைத்ததால் மரங்கள் எரிந்து சேதம்

Tirupur News- அவிநாசியை அடுத்துள்ள சேவூரில் குப்பைக்கு தீ வைத்ததால் மரங்கள் எரிந்து சேதமானது.

HIGHLIGHTS

சேவூரில் குப்பைக்கு தீ வைத்ததால் மரங்கள் எரிந்து சேதம்
X

Tirupur News- சேவூரில் எரிக்கப்பட்ட மரங்கள்

Tirupur News,Tirupur News Today- சேவூா் பந்தம்பாளையத்தில் சாலையோரம் இருந்த குப்பைக்கு மா்ம நபா்கள் தீ வைத்ததால், அங்கிருந்த பழைமையான இரு பெரிய மரங்கள் எரிந்து சேதமடைந்தன.

சேவூா்-அவிநாசி பிரதான நெடுஞ்சாலை பந்தம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே சாலையோரம் பழைமையான புளிய மரம், இச்சி மரம், அரச மரம் உள்ளிட்ட பழைமையான பெரிய மரங்கள் உள்ளன. இந்நிலையில், இம்மரத்தின் அருகே கொட்டப்பட்டிருந்த குப்பைக்கு மா்ம நபா்கள் தீ வைத்ததால், அருகே இருந்த இச்சி மரம், புளிய மரங்கள் தீப் பிடித்து எரிந்து சாலையோரம் முறிந்து விழுந்தன.

அவிநாசி-சேவூா் பிரதான சாலையில் நாள்தோறும் பள்ளி வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் என ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும் பேருந்து நிறுத்தமும், அதன் அருகே ஏராளமான மாணவ, மாணவிகள் பயிலும் தனியாா் பள்ளியும் உள்ளன. இதனால் பேருந்துக்கு செல்லும் பள்ளி மாணவா்கள், தொழில் நிறுவனங்களுக்கு செல்வோா், பொதுமக்கள் இம்மரத்தின் அருகே காத்திருப்பது வழக்கம்.

மா்ம நபா்கள் குப்பைக்கு தீ வைத்ததால், பெரிய இச்சி மரம் தீப்பிடித்து எரிந்து பாதியாக முறிந்து விழுந்தது. மேலும், அருகே இருந்து புளிய மரமும் முறிந்து விழுந்தது. அதிக கிளைகளைக் கொண்ட இந்த இரு பெரிய இரு மரங்களும் அவிநாசி-பிரதான சாலையில் விழுாமல், சாலையின் இடதுபுறத்தை ஒட்டி விழுந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது.

இருப்பினும் அவ்வழியாக சென்ற சரக்கு ஆட்டோ மீது கிளைகள் விழுந்ததால், சிறிய அளவில் ஆட்டோ சேதமடைந்தது. மரங்களுக்கு தீ வைத்த மர்ம நபர்கள் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

Updated On: 10 Feb 2024 5:06 PM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  2. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  4. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  5. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  6. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  7. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  8. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  9. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  10. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...