/* */

உதவித்தொகை கேட்டு  ஆட்சியரிடம் மனு; மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு உதவிய எம்எல்ஏ.,

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உதவித்தொகை கேட்டு மாற்றுத்திறனாளி சிறுவன் மனு அளித்தார்.

HIGHLIGHTS

உதவித்தொகை கேட்டு  ஆட்சியரிடம் மனு;  மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு உதவிய எம்எல்ஏ.,
X

தனது தாயருடன் மனு அளிக்க வந்த மாற்றுத்திறனாளி சிறுவன்.

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட சின்ன வேப்பம்பட்டு ஊராட்சி கூயாலி வட்டம் பகுதியை சேர்ந்தவர் திருப்பதி. இவரது மகன் சதிஷ் (வயது 19). இவர் 80 சதவீதம் நடக்க முடியாத மாற்றுத்திறனாளி ஆவார். இவரால் ஒரு இடத்தை விட்டு மற்றொரு இடத்திற்கு அடுத்தவர்களின் ஆதரவின் இல்லாமல் போகமுடியாது. உணவு சாப்பிட முடியாது.

இவர், கடந்த 2020 ஆம் ஆண்டு தனக்கு உதவித்தொகை கேட்டு விண்ணப்பம் அளித்துள்ளார். அதன்பின் உதவித்தொகை வழங்க ஆணை வழங்கபட்டு இதுநாள் வரை உதவித்தொகை வழங்கபடவில்லை. இதுகுறித்து பலமுறை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று முறையிட்டும் எந்த பலனும் இல்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சதிஷ் தனது தாயாருடன் மனு கொடுக்க வந்திருந்தார். இதனை பார்த்த ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் மனுவை பெற்றுக்கொண்டு உடனடியாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரியிடம் போன் செய்து அவருக்கு உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் மனு மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 9 Aug 2021 4:54 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளர் சந்திப்பு |...
  2. வீடியோ
    என்னைய கோவிலுக்கு போக கூடாதுன்னு சொல்ல அவர் யாரு?...
  3. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் நாளை நீட் தேர்வு; 6,120 பேர் பங்கேற்க வாய்ப்பு
  4. திருமங்கலம்
    ரேபரேலி காங்கிரஸ் கோட்டை: விஜய் வசந்த் எம்.பி. பேட்டி..!
  5. லைஃப்ஸ்டைல்
    கடன் இல்லா வாழ்க்கை வாழ ஆசை..!
  6. வீடியோ
    கடவுள் நம்பிக்கை இருக்கிறது தப்பில்லையே! | #mysskin | #hinduTemple |...
  7. வீடியோ
    உன்ன யாருடா தடுத்து நிறுத்துனா? | வெறியான சந்தானம் |...
  8. அருப்புக்கோட்டை
    சேது பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி.!
  9. வீடியோ
    ஒழுகத்திற்கு ஆன்மீகம் ரொம்ப முக்கியம் |#santhanam -த்திடம் Amount...
  10. வீடியோ
    அரைகுறையா இருக்கும் சினிமா வேணாம்! கோவில்ல அம்மனை பார்த்தாலே போதும்!...