/* */

நெல்லையில் அரசு பொருட்காட்சி: அமைச்சர் சுவாமிநாதன் தொடங்கி வைத்தார்

நெல்லை அரசுபொருட்காட்சி விழாவில் 699 பயனாளிகளுக்கு 3.99 கோடி நலத்திட்ட உதவிகளை சபாநாயகர் செய்தித்துறை அமைச்சர் வழங்கினர்

HIGHLIGHTS

நெல்லையில் அரசு பொருட்காட்சி: அமைச்சர் சுவாமிநாதன் தொடங்கி வைத்தார்
X

நெல்லையில் அரசு பொருட்காட்சியை செய்தித்துறை அமைச்சர் சுவாமிநாதன் தொடங்கி வைத்தார்

மதுரை, சேலம், கோவை ஆகிய மூன்று மாவட்டங்களில் நடத்தப்பட்ட அரசு பொருட்காட்சி மூலம் 4, லட்சத்து 70,000 பேர் பார்த்து பயன்பெற்றுள்ளனர் என்று நெல்லையில் அரசு பொருட்காட்சியை தொடங்கி வைத்த அமைச்சர் மு.பே.சாமிநாதன் தெரிவித்தார். மேலும் விழாவில் 699 பயனாளிகளுக்கு 3 கோடியே 99 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

கொரோனா தாக்கத்தின் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக நெல்லையில் அரசு பொருட்காட்சி நடத்தப் படவில்லை. தற்போது கொரோனா தொற்று கட்டுக்குள் வந்த நிலையில்,இந்த ஆண்டு பொருட்காட்சி நடத்த திட்டமிடப்பட்டு நெல்லை வ.உ.சி மணிமண்டபம் பின் பகுதியில் அரங்குகள் அமைக்கப்பட்டு இதன் தொடக்கவிழா தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் மகேஷன் காசிராஜன் தலைமையில் நடைபெற்றது.

இதில் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, செய்தித்துறை அமைச்சர் மு.பே.சாமிநாதன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பொருட்காட்சி அரங்குகளை திறந்து வைத்து அரங்குகளை பார்வையிட்டனர்.இதில் அரசுதுறை சார்பில் 32 அரங்குகளும், தனியார் சார்பில் 19 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நடந்த விழாவில் சபாநாயகர் மற்றும் அமைச்சர் இணைந்து 699 பயனாளிகளுக்கு 3 கோடியே 99 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

பின்னர் அமைச்சர் மு.பே .சாமிநாதன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: தமிழக அரசு சார்பில் பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து செய்தித்துறை சார்பில் மதுரை,சேலம், கோவை அதற்கு அடுத்தபடியாக 4- வது இடமாக நெல்லை மாவட்டத்தில் அரசு பொருட்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

பொருட்காட்சி நடைபெற்ற மூன்று இடங்களிலும் மொத்தம் 4 லட்சத்து 70 ஆயிரம் பேர் அதனை பார்வையிட்டு பயன்பெற்றுள்ளனர். பொருட்காட்சி நடத்தப்படுவதின் நோக்கம் அரசின் ஒவ்வொரு துறையின் நலத்திட்டங்களை பொதுமக்கள் அறிந்து கொள்வதுடன் எவ்வாறு அந்த திட்டங்களுக்கு விண்ணப்பிப்பது, எந்த திட்டங்கள் எந்த துறையின் கீழ் வருகிறது என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் பொருட்காட்சி நடத்தப்படுகிறது.

நெல்லையில் அமைக்கப்பட்டுள்ள பொருட்காட்சியில் அரசுத்துறை சார்ந்த 32 அரங்குகளும் தனியார் சார்பில் 19 அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளது . 04.11.22 22 வரை 45 நாட்கள் இந்த பொருட்காட்சி நடைபெறும் எனவே நெல்லை மாவட்ட மக்கள் இந்த பொருட்காட்சியை பார்வையிட்டு பயன் பெற வேண்டும் என்றார் அமைச்சர் சாமிநாதன்.

இந்த நிகழ்ச்சியில் செய்தித்துறை இயக்குனர் ஜெயசீலன், மாவட்ட ஆட்சியர் விஷ்ணு , பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல்வகாப், மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 21 Sep 2022 2:00 AM GMT

Related News