/* */

கால்நடை மற்றும் அறிவியல் ஆராய்ச்சி மையம்- அலுவலக கட்டிட அடிக்கல் நாட்டு விழா

இராமையன்பட்டி அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சி நிலையத்தில் அலுவலக கட்டிடத்திற்கு அமைச்சர் அனிதா.ஆர்.ராதாகிருஷ்ணன் அடிக்கல் நாட்டினார்.

HIGHLIGHTS

கால்நடை மற்றும் அறிவியல் ஆராய்ச்சி மையம்- அலுவலக கட்டிட அடிக்கல் நாட்டு விழா
X

அமைச்சர் அனிதா.ஆர்.ராதாகிருஷ்ணன்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு படி மீன் வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா.ஆர்.ராதாகிருஷ்ணன் , மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு, சா.ஞானதிரவியம் எம்.பி, தமிழ்நாடு கால்நடை மருத்துவம் மற்றும் அறிவியல் பல்கலைகழக துணைவேந்தர் கா.நா.செல்வகுமார், மு.அப்துல் வகாப் எம்.எல்.ஏ , நயினார் நாகேந்திரேன் எம்.எல்.ஏ , ஆகியோர் முன்னிலையில், கால்நடை மற்றும் அறிவியல் ஆராய்ச்சி மையம் சார்பில் ரூ.13.50 கோடி மதிப்பில் அலுவலக கட்டிடம் மற்றும் மாணவ மாணவியர்களுக்கான கூடுதல் விடுதி கட்டிடத்திற்கு, இராமையன்பட்டி அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சி நிலையத்தில் இன்று அடிக்கல் நாட்டினார்கள்.

மீன் வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா.ஆர்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசும்போது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு படி, திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், கல்விக்கூடம், கூடுதல் மாணவர், மாணவியர் விடுதி கட்டும் பணியானது 56,910 சதுர அடி பரப்பளவில், ரூபாய். 13.41 கோடி திட்ட மதிப்பில் இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி 1989 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம், 20 ஆம் நாள் தெற்காசியாவின் முதல் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகமாக தொடங்கி வைக்கப்பட்டது. இப்பல்கலைக்கழகத்தின் மூன்றாவது உறுப்புக் கல்லூரியாக தென்தமிழகத்தில் உள்ள கால்நடை பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் 2012 ஆம் ஆண்டில் துவங்கப்பட்ட கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், திருநெல்வேலியில் உள்ள இராமையன்பட்டியில் சுமார் 140 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது.

இக்கல்லூரியில், 2012-13ஆம் கல்வியாண்டில் 40 மாணவ மாணவியர்களுடன் இளங்கலை கால்நடை மருத்துவ பட்டப்படிப்பு ஆரம்பிக்கப்பட்டு, தற்சமயம், வருடத்திற்கு 80 மாணவர்களுக்கு சேர்க்கை நடைபெற்று வருகிறது. தற்சமயம், 374 மாணவ மற்றும் மாணவிகள் பயின்று வருகின்றனர். இக்கல்லூரியில், தரமான கட்டிட அமைப்பு, நவீன தொழில்நுட்ப உபகரணங்களை உள்ளடக்கிய ஆய்வக வசதிகள், உயர்தர சிகிச்சை முறைகளை கையாளும் கால்நடை மருத்துவ சிகிச்சை வளாகம், கால்நடை உற்பத்தி மற்றும் மேலாண்மை உத்திகளை விளக்கும் கால்நடைப் பண்ணை வளாகம் உள்பட மொத்தம் 17 சிறப்பு துறைகள் செயல்பட்டு வருகின்றன. இக்கல்லூரியானது 2015 ம் ஆண்டில், இந்திய கால்நடை மருத்துவ கழகத்தினால் முதல் தர சான்றிதழ் பெறப்பட்டுள்ளது.

மேலும், மாணவ, மாணவியர்களுக்கான தனித்தனி விடுதி வசதிகள் உள்ளன. 2019-20 ஆம் ஆண்டில் இருந்து முதுகலை பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கையும் நடைபெற்று மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். புதிதாக இக்கல்விக்கூடத்தில் ஆய்வகம், வகுப்பு அறை, தேர்வு எழுதும் அறை, அலுவலர்கள் அமரும் அறை ஆகிய வசதிகள் உள்ளன. மேலும், 76 மாணவர்கள் தங்குவதற்கு வசதியாக 38 அறைகளுடன் கூடிய மாணவர் விடுதியும், 28 மாணவிகள் தங்குவதற்கு வசதியாக 14 அறைகளைக் கொண்ட மாணவியர் விடுதியும் கட்டப்பட உள்ளது.

மேலும் கால்நடை பராமரிப்புத்துறையானது கால்நடைகள் வளர்ப்பு தொடர்பானது மட்டுமல்லாமல், விவசாயிகளின் நலம் சார்ந்த துறையாகவும், இரு துறைகளும் இணைந்து, தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் வகையில் மாற்றி அமைத்திட ஏதுவாக, மேலும் பல புதிய கால்நடை மருத்துவ கல்லூரிகள் ஏற்படுத்தப்படும் வகையில், இது தொடர்பான நடவடிக்கையாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, ஆய்வு அறிக்கையினை தமிழக முதலமைச்சரிடம் வழங்கப்பட்டுள்ளது.

வருகின்ற பட்ஜெட் கூட்ட தொடரில் தமிழக முதலமைச்சர் அறிவிப்புகள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு புதிய கல்லூரிகள் ஏற்படுத்தப்படும் பட்சத்தில் புதிய பணியிடங்களும், மாணவர் சேர்க்கை அதிக படுத்தும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும் தற்போது இருகின்ற கால்நடை மருத்துவ கல்லூரிகளில் காலி பணியிடங்களை நிரப்புவது மற்றும் கூடுதல் மாணவர் சேர்கை பணியில் கொரோனா பெருந்தொற்று காரணமாக தொய்வு ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் போர்கால நடவடிக்கையால் தற்போது தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று வெகுவாக குறைந்துள்ளது. இனி வரும் காலங்களில் கால்நடை கல்லூரியில் காலியாகவுள்ள பணியிடங்களை ஆய்வு செய்து, அதன் அறிக்கையினை தமிழக முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று, காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். என அமைச்சர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் கால்நடை மருத்துவம் மற்றும் அறிவியல் பல்கலைகழக பதிவாளர் டென்சிங் ஞானராஜ், கால்நடை மருத்துவக்கல்லூரி ஆராய்ச்சி நிலைய முதல்வர் ஆ.பழனிசாமி, பேராசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



Updated On: 10 July 2021 11:57 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  2. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  3. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  4. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  5. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  6. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  8. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  9. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  10. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு