/* */

நெல்லையில் பல்வேறு விளையாட்டு போட்டி: நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ பங்கேற்பு

நெல்லையில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

HIGHLIGHTS

நெல்லையில் பல்வேறு விளையாட்டு போட்டி:  நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ பங்கேற்பு
X

திருநெல்வேலி தொகுதிக்குட்பட்ட விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கான பல்வேறு விளையாட்டு போட்டிகள் எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

புத்தாண்டை முன்னிட்டு திருநெல்வேலி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கான பல்வேறு விளையாட்டு போட்டிகள் சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

திருநெல்வேலி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஊர்களில் உள்ள பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் திறமை வாய்ந்த மற்றும் விருப்பமுள்ள வீரர்கள், வீராங்கனைகளை கண்டறிந்து அவர்களுக்காக நடத்தும் விளையாட்டு போட்டிகள். இந்த விளையாட்டுப் போட்டிகளை திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் கிறிஸ்மஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடத்தினார்.

போட்டியினை விஜய் நயினார் நாகேந்திரன் துவக்கி வைத்தார். திருநெல்வேலி தொகுதிக்குட்பட்ட சுமார் 15க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த போட்டிகள் நடைபெறுகின்றன. இந்த போட்டிகளில் தடகளம் வாலிபால் குண்டு எறிதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் இடம் பெற்றுள்ளன. சுமார் ஜந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். இப்போட்டிகள் பல்வேறு இடங்களில் தொடர்ந்து வரும் 5-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதில் வெற்றிபெறும் வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது.

இதனை தொடர்ந்து வெற்றி பெற்ற வீரர்களுக்கு அண்ணா விளையாட்டு அரங்கில் மாவட்ட அளவிலான போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இதனை தொடர்ந்து இறுதியாக வெற்றி பெறும் வீரர்களுக்கு மாநில அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்வதற்கு தேவையான அனைத்து உதவிகளும் திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் சார்பாக அனுப்பப்பட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 1 Jan 2022 1:29 PM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  3. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை மின்சார ரயில் அலைமோதும் மக்கள் கூட்டம்; கூடுதல்...
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  5. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  6. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  9. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  10. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?