/* */

ராமையன்பட்டி கால்நடை ஆராய்ச்சி கல்லூரியில் பாரம்பரிய கோழி, ஆடு, நாய் கண்காட்சி

தமிழ்நாடு கால்நடை மருத்துவ ஆராய்ச்சி கல்லூரியில் மண்டல அளவிலான பாரம்பரியமிக்க நாட்டின கால்நடைகள், கோழிகள் மற்றும் நாய்கள் கண்காட்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

ராமையன்பட்டி கால்நடை ஆராய்ச்சி கல்லூரியில் பாரம்பரிய கோழி, ஆடு, நாய் கண்காட்சி
X

ராமையன்பட்டி கால்நடை ஆராய்ச்சி கல்லூரியில் நடைபெற்ற பாரம்பரிய கோழி, ஆடு மற்றும் நாய் கண்காட்சியில் பள்ளி மாணவ- மாணவிகள்.

நெல்லை மாவட்டம், ராமையன்பட்டியில் அமைந்திருக்கும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ ஆராய்ச்சி கல்லூரியில் மண்டல அளவிலான பாரம்பரியமிக்க நாட்டின கால்நடைகள், கோழிகள் மற்றும் நாய்கள் கண்காட்சி உலக கால்நடை தினத்தை முன்னிட்டு நடைபெற்று வருகிறது.

ஏப்ரல் 29 மற்றும் 30 ஆகிய இரண்டு தினங்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் நாட்டு ஆடுகள் ,கோழிகள் ,வாத்துகள்,வான்கோழிகள், நாய்கள் மற்றும் கின்னிக்கோழிகள் போன்றவை கண்காட்சியல் இடம்பெற்றிருந்தன. கன்னி இன வெள்ளாடு , கொடி இன வெள்ளாடு, கீழ கரிசல், ,செவ்வாடு இன செம்மறி ஆடுகள் மற்றும் கன்னி, சிப்பிபாறை, ராஜபாளையம், கோம்பை ஆகிய நாட்டின நாய்களும் இந்த கண்காட்சியில் பங்கேற்றன.

தென் மாவட்டங்களை பூர்வீகமாகக் கொண்ட நாட்டு இனங்கள் தற்போது முறையற்ற கலப்பின சேர்க்கையால் எண்ணிக்கையில் குறைந்து வருவதால், நாட்டின வகைகள் அழிவை சந்தித்து வருகிறது. இதனை தடுக்கவும் நாட்டினங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் இத்தகைய கண்காட்சி தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கால்நடை பண்ணையாளர்கள், மாணவர்கள், பொதுமக்கள் கண்காட்சியை காணும் வகையில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியை நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு திறந்து வைத்தார்.

இதனைத்தொடர்ந்து அரங்குகளை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் அரங்குகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள ஆடு, கோழி, நாய் இனங்கள் குறித்து கேட்டறிந்தார். இதை தொடர்ந்து நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் இந்த கண்காட்சியை பார்த்து சென்றனர். அவர்களுக்கு கால்நடை மருத்துவ மாணவர்கள் தரப்பில் கால்நடைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

Updated On: 29 April 2022 11:34 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உனை பிரியாத வரவேண்டும் என்னுயிரே..!
  2. லைஃப்ஸ்டைல்
    குடும்ப உறவாகும் நட்பு..! இருபக்க மகிழ்ச்சி..!
  3. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ் MLA ரூபி மனோகரன் செய்தியாளர் சந்திப்பு | Ruby...
  4. வீடியோ
    அதெல்லாம் அவுங்க விருப்பம்!மிஷ்கினுக்கு அறிவுரை சொன்ன முதியவர்! சொல்ல...
  5. வீடியோ
    🔴LIVE : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளர் சந்திப்பு |...
  6. வீடியோ
    என்னைய கோவிலுக்கு போக கூடாதுன்னு சொல்ல அவர் யாரு?...
  7. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் நாளை நீட் தேர்வு; 6,120 பேர் பங்கேற்க வாய்ப்பு
  8. திருமங்கலம்
    ரேபரேலி காங்கிரஸ் கோட்டை: விஜய் வசந்த் எம்.பி. பேட்டி..!
  9. லைஃப்ஸ்டைல்
    கடன் இல்லா வாழ்க்கை வாழ ஆசை..!
  10. வீடியோ
    கடவுள் நம்பிக்கை இருக்கிறது தப்பில்லையே! | #mysskin | #hinduTemple |...