/* */

நெல்லையில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி செயற்குழுக் கூட்டம்

திருநெல்வேலியில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

நெல்லையில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி செயற்குழுக் கூட்டம்
X

திருநெல்வேலியில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணியினரின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி நெல்லை மாவட்ட செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இச்செயற்குழு கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் மைக்கேல் ஜார்ஜ் கமலேஷ் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் பிரமநாயகம் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் பால்ராஜ் அனைவரையும் வரவேற்று பேசியதுடன் மதுரையில் நடைபெற்ற மாநில செயற்குழு கூட்ட முடிவுகளையும் விளக்கிக் கூறினார். மாவட்ட பொருளாளர் அமுதா நன்றி கூறினார்.


செயற்குழு கூட்டத்தில்

வருகின்ற ஆகஸ்ட் - 15 சுதந்திர தினத்திற்கு பின்பு ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளை சுழற்சி முறையில் திறந்திட தமிழக அரசு உடனடியாக அறிவிப்பு வெளியிட வேண்டும்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தப்படவில்லை. எனவே உடனடியாக பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கிட வேண்டும்.

மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு 11% சதவீத அகவிலைப்படி உயர்வு அறிவித்தது போன்று மாநில அரசும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு உடனடியாக 11% சதவீத அகவிலைப்படி உயர்வை அறிவித்திட வேண்டும்.

கற்போம் - எழுதுவோம் திட்டத்திலிருந்து பள்ளி ஆசிரியர்களை விடுவித்து தன்னார்வலராக பணிபுரியும் ஊழியர்களுக்கு மாதம்தோறும் மதிப்பூதியம் வழங்கிட வேண்டும்.

அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களை பணி நிரவல் செய்யும் போது அவர்களுக்குரிய நிர்வாகத்தில் காலிப்பணியிடம் இல்லை எனில் அவர்களை அரசு பள்ளிகளில் காலியாக உள்ள இடங்களுக்கு ஈர்த்துக் கொள்ள வேண்டும்.

வள்ளியூர் கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட நான்குனேரி, வள்ளியூர், களக்காடு மற்றும் இராதாபுரம் பகுதியில் உள்ள அரசு நிதியுதவி பெறும் தனியார் பள்ளிகளுக்கு 2019 ஆம் ஆண்டிற்கான நிர்வாக மானியம் உடனடியாக அனுமதிக்க வேண்டும்.

அம்பாசமுத்திரம் மற்றும் விக்கிரமசிங்கபுரம் நகராட்சிக்கு உட்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு இரண்டாம் நிலை நகராட்சிக்கான வீட்டு வாடகை படி உயர்த்தி வழங்கிட வேண்டும்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற சிகிச்சைக்கான தொகையினை மீள பெற்றுத் தரக்கோரி கொடுக்கப்பட்ட விண்ணப்பங்களை உடனுக்குடன் பரிசீலனை செய்து விண்ணப்பதாரர்களுக்கு செலவிட்ட தொகையை உடனடியாக கிடைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கும் போராட்ட காலத்தினை முறைப்படுத்தி அதற்கான ஊதியத்தை உடனடியாக வழங்கிட வேண்டும்.

தமிழக அரசு தேர்தல் அறிக்கை மற்றும் தேர்தல் பரப்புரையில் அறிவித்தபடி புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்துக்கான அறிவிப்பை உடனடியாக வெளியிடுவதுடன் பாதிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை வழங்கிடும் அறிவிப்பையும் வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிவிக்க தமிழக அரசை இச்செயற்குழு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி திருநெல்வேலி மாவட்ட கிளைக்கு சொந்தமாக இடம் வாங்கி அலுவலகம் கட்டுவது எனவும் அதற்காக இயக்க உறுப்பினர்களிடம் நன்கொடை வசூல் செய்து ஓராண்டுக்குள் இடம் வாங்கி அலுவலகம் கட்டி முடிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Updated On: 8 Aug 2021 5:47 PM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...