/* */

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ளூர் மக்களுக்கு வேலை வழங்க கோரி போராட்டம்

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வலியுறுத்தி ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ளூர் மக்களுக்கு வேலை வழங்க கோரி போராட்டம்
X

உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க கோரி கூடங்குளம் கேட்டு முன்பு ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க கோரி கூடங்குளம் கேட்டு முன்பு ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷ்ய நாட்டு உதவியுடன் தலா ஆயிரம் மெகாவாட் மின் திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மேலும் 3-வது 4-வது அணு உலைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகளில் கூடங்குளம் அணுஉலைகளுக்கு நிலம் கொடுத்தவர்கள் மற்றும் உள்ளூர் மக்களுக்கு பணிகள் வழங்க வேண்டும், என நீண்ட நாட்களாகவே கூடன்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பகுதி மக்கள் கோரிக்கை வைத்து இருந்தனர். இந்நிலையில் கடந்த இரு தினங்களாக கூடங்குளம் அணு உலையில் முப்பத்தி நான்கு பொறியாளர்கள் மற்றும் பணியாளர்கள் தேர்வுக்கான எழுத்து தேர்வு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று காலை உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட கவுன்சிலர்கள், ஆவரைகுளம் பாஸ்கர் ஜான் ரூபா, கூடங்குளம் கிராம ஊராட்சி மன்ற தலைவி வின்சி ஆகியோர் தலைமையில் கூடன்குளம் வளாக கேட் முன்பு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கூடன்குளம் அணு உலையில் பணிக்கு வருபவர் வாகனங்கள் மற்றும் பணியாளர்கள் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்.

Updated On: 20 Dec 2021 7:19 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தங்கை, தாவணி அணிந்த தாய்..!
  2. ஆன்மீகம்
    பேரருள் தருவாய் பெருமாளே..!
  3. லைஃப்ஸ்டைல்
    தீயவன் என்று அறிந்தால் ஒதுங்கிவிடு..!
  4. வீடியோ
    ManmohanSingh-கை கண்டித்த Thuglak சோ !அப்ப என்ன நடந்தது ?#thuglak...
  5. வீடியோ
    விடாமல் பொளந்து கட்டும் Modi | மீள முடியாமல் விழிபிதுங்கும் Congress |...
  6. அரசியல்
    400 இடங்கள் கிடைக்குமா? வடமாநிலங்களில் டல் அடிக்கும் பாஜக பிரச்சாரம்
  7. ஈரோடு
    ஈரோட்டில் இன்று 107.6 டிகிரி வெயில் பதிவு
  8. வால்பாறை
    வறட்சி காரணமாக டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து 20 வளர்ப்பு யானைகள்...
  9. வீடியோ
    Muslim என்று மோடி சொன்னாரா ? கொந்தளித்த இராம ஸ்ரீனிவாசன் !#muslim...
  10. உலகம்
    ஆஸ்திரேலிய நாட்டின் கடற்கரையில் நூற்றுக்கணக்கில் ஒதுங்கிய...