/* */

குடிநீர் இணைப்புகளில் பயன்படுத்திய 36 மின் மோட்டார்கள் பறிமுதல்

நெல்லையில் சட்டத்திற்கு புறம்பாக வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் பயன்படுத்திய 36 மின் மோட்டார்களை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

குடிநீர் இணைப்புகளில் பயன்படுத்திய 36 மின் மோட்டார்கள் பறிமுதல்
X

பறிமுதல் செய்யப்பட்ட 36 மின்மோட்டார்கள்.

திருநெல்வேலி மாநகராட்சி நான்கு மண்டல பகுதிகளில் தனி குழுக்கள் அமைத்து 2வது நாளாக ஆய்வு மேற்கொண்டனர். இதில் சட்டத்திற்கு புறம்பாக குடிநீர் இணைப்பில் பயன்படுத்திய தச்சைநல்லூர் மண்டலம் வார்டு 11, 12, 14 பரணிநகர், வஉசி தெரு, தேனீர்குளம் ஆகிய பகுதிகளில் உதவி ஆணையாளர் (பொ) லெனின் தலைமையில் 12 மின்மோட்டார்களும், திருநெல்வேலி மண்டலம் வார்டு 19 பேட்டை பகுதியில் உதவி ஆணையாளர் (பொ) பைஜூ தலைமையில் 10 மின் மோட்டார்களும், பாளையங்கோட்டை மண்டலம் வார்டு 35 அருணகிரிநாதர் தெரு பகுதி வீடுகளில் உதவி செயற்பொறியாளர் சாந்தி தலைமையில் 10 மின்மோட்டார்களும்,. மேலப்பாளையம் மண்டலம் வார்டு 52 பகுதி 3 மற்றும் 4வது தெரு, ராஜா நகர் பகுதி வீடுகளில் உதவி செயற்பொறியாளர் ராமசாமி தலைமையில் 4 மின்மோட்டார்களும், ஆக மொத்தம் 36 மின்மோட்டார்களை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இது குறித்து மாநகராட்சி ஆணையாளர் விஷ்ணுசந்திரன் திருநெல்வேலி மாநகராட்சி பகுதிகளில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் சட்டத்திற்கு புறம்பாக குடிநீர் உறுஞ்சுவது தண்டனைக்குரிய குற்றமாகும், மின்மோட்டார் வைத்து குடிநீர் உறுஞ்சுவதால் அப்பகுதி மக்களுக்கு சீரான குடிநீர் வழங்க இயலாத நிலை ஏற்படுகிறது. தொடர்ச்சியாக மின்மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சினால் வீட்டு உரிமையாளர்களிடத்தில் இருந்து மோட்டார்கள் பறிமுதல் செய்வதுடன், அபராதம் விதிக்கப்படும். குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்படுவதுடன் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். மாநகராட்சி அதிகாரிகளின் ஆய்வு பணியானது தினமும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது உதவி பொறியாளர்கள், பட்டுராஜன், சிவசுப்பிரமணியன், அருள், நாகராஜன் மற்றும் இளநிலை பொறியாளர்கள் முருகன், ஐயப்பன், ஜெயகணபதி, தன்ராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

Updated On: 9 May 2022 2:42 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்..! விழிப்புடன் இருங்க..!
  2. பொன்னேரி
    பெருமாள் - சிவன் நேருக்கு நேர் சந்திக்கும் ஹரிஹரன் சந்திப்பு விழா
  3. லைஃப்ஸ்டைல்
    பட்ஜெட் போடுங்க... பணத்தை சேமிங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    நிமிர்ந்து நில்..! மலைகூட மடுவாகும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் 15வது திருமண நாள் வாழ்த்துகள்
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிமையை தேட புத்த மொழிகள்!
  7. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2வது நாளாக 82 கன அடியாக நீடிப்பு
  8. ஈரோடு
    மாணவர் மீது தாக்குதல்: ஈரோடு தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகம் மீது...
  9. ஆவடி
    அடுக்குமாடி குடியிருப்பில் தவறி விழுந்த குழந்தையை காப்பாற்றும் வீடியோ...
  10. வானிலை
    ஊட்டிக்கே இந்த நிலைமைனா? மத்த ஊரை யோசித்து பாருங்க!