/* */

நெல்லைக்கு ரிங் ரோடு நிச்சயம் - அமைச்சர் எ.வ. வேலு உறுதி

நெல்லைக்கு நிச்சயம் ரிங் ரோடு அமைக்கப்படும் என அமைச்சர் எ.வ. வேலு உறுதியளித்துள்ளார்.

HIGHLIGHTS

நெல்லைக்கு ரிங் ரோடு நிச்சயம் - அமைச்சர் எ.வ. வேலு உறுதி
X

நெல்லையில் நடந்த பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம்.

கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் இருந்து திருவள்ளுவர் பாறைக்கு செல்ல 37 கோடி ரூபாயில் தொங்கு பாலம் அமைக்கப்படும். தமிழகம் முழுவதும் இந்தாண்டு 2000 கி.மீ தூரம் கிராம சாலைகள் தரம் உயர்த்தப்படும் என்று நெல்லையில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு தெரிவித்தார்.

நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி. விருதுநகர் ஆகிய 5 மாவட்டங்களை சேர்ந்த பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நெல்லையில் இன்று நடைபெற்றது.

பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், ஐந்து மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் துறை அலுவலர்கள் பங்கேற்றனர். இந்த ஆய்வின் போது பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்து அதிகாரிகளிடம் அமைச்சர் கேட்டறிந்தார்.

மேலும் ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதியில் நிறைவேற்றப்பட வேண்டிய பணிகள் குறித்து அமைச்சரிடம் கோரிக்கை வைத்தனர்.

பின்னர், அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஊராட்சி மற்றும் ஒன்றிய சாலைகள் குறித்து ஆய்வு கூட்டத்தில் முதன்மையாக பேசப்பட்டது. இந்த ஆண்டு 2000 கிலோமீட்டர் கிராம சாலைகள் தரம் உயர்த்தப்படும். தென்காசி, அம்பாசமுத்திரம், சங்கரன்கோவில் ஆகிய மூன்று பகுதிகளில் புறவழிச் சாலை அமைப்பதற்கு நிலம் எடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

அதேபோல், ஐந்து மாவட்டங்களை சேர்ந்த நகரங்களில் புறவழிச்சாலை அமைக்க முக்கியத்துவம் கொடுத்து பணிகள் நடைபெற்று வருகிறது. இருவழி சாலைகளை நான்கு வழிச் சாலைகளாகவும், நான்கு வழிச் சாலைகளை ஆறு வழிச் சாலக்களாகவும், மாற்ற திட்ட மதிப்பீடு செய்யப்படும்.

பொதுப்பணித்துறை சார்பில் விருதுநகர் மாவட்டத்தில் 147.44 கோடி ரூபாயில், தென்காசி மாவட்டத்தில் 144.49 கோடி ரூபாயில், நெல்லை மாவட்டத்தில் 104.58 கோடி ரூபாய் மதிப்பிலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்பட பல்வேறு கட்டிடங்கள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.

கன்னியாகுமரியில் தற்போது படகு மூலமாக தான் விவேகானந்தர் பாறைக்கு செல்ல வேண்டியுள்ளது. விவேகானந்தர் பாறையில் இறங்கி மீண்டும் படகில் ஏறி திருவள்ளுவர் பாறைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே விவேகானந்தர் பாறையில் இருந்து திருவள்ளூர் பாறை உள்ள இடைப்பட்ட தூரமான 140 மீட்டர் தூரத்தில் தொங்கு பாலம் அமைக்க திட்டம் மதிப்பீடு தீட்டப்பட்டு 37 கோடி ரூபாய் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான டெண்டர் விடும் பணிகள் தொடங்கியுள்ளது.

இருப்பினும், கடலில் பாறை இருக்கும் காரணத்தால் ஐஐடி பேராசிரியர்களின் ஆலோசனைகளை பெற்று விரைவில் டெண்டர் இறுதி செய்யப்பட்டு தொங்கு பாலம் அமைக்கப்படும். அந்த பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தான் திறந்து வைப்பார்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சிறப்பு விருந்தினர்களின் நலன் கருதி சுற்றுலா மாளிகை கட்டப்படும். பொதுவாகக் கிராமப் பொருளாதாரம், நகர பொருளாதாரம் அனைத்தும் நெடுஞ்சாலைத் துறையை சார்ந்து தான் உள்ளது. எனவே நெடுஞ்சாலைத்துறைக்கு முன்னுரிமை அளித்து எங்கெங்கு பிரச்சினைகள் உள்ளதோ அதை அரசின் கவனத்திற்கு கொண்டு வரும்படி மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தி உள்ளேன்.

நெல்லையில் ரிங் ரோடு அமைப்பது தொடர்பாக ஆய்வு செய்ய இருக்கிறேன். நிச்சயம் நெல்லைக்கு ரிங் ரோடு அமைக்கப்படும் என்று அமைச்சர் கூறினார்.

தொடர்ந்து திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலுக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களின் நலனுக்காக தனி நடை பாதை அமைக்கப்படுமா என்று கேள்வி எழுப்பியபோது ஏற்கனவே இருக்கிற சாலையை அகலப்படுத்த சொல்கிறார்கள். பிறகு எப்படி தனி பாதை அமைக்க முடியும் என்று அமைச்சர் பதிலளித்தார்.

Updated On: 23 July 2021 11:04 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  2. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  3. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  4. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  5. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  6. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  7. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  8. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  10. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்