/* */

காட்டுநாயக்கர் சமுதாயத்திற்கான சாதி சான்றிதழ் வழங்க கோரிக்கை

காட்டுநாயக்கர் சமுதாயத்திற்கான சாதி சான்றிதழ்களை வழங்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து மனு

HIGHLIGHTS

காட்டுநாயக்கர் சமுதாயத்திற்கான சாதி சான்றிதழ் வழங்க கோரிக்கை
X

 காட்டுநயக்கர் சமுதாயத்திற்கான சாதி சான்றிதழ்களை வழங்க வலியுறுத்தி  நெல்லை மாவட்ட ஆட்சியர் பள்ளி மாணவர்களுடன் 50 க்கும் மேற்பட்டோர் 

நெல்லை மாவட்டத்தில் வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்ட காட்டுநயக்கர் சமுதாயத்திற்கான சாதி சான்றிதழ்களை உடனடியாக வழங்க வலியுறுத்தி பள்ளி மாணவர்களுடன் 50 க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு மனு அளிக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லை மாவட்டம் பத்தமடை மற்றும் புதுக்குடி பகுதிகளில் சுமார் 300 க்கும் மேற்பட்ட காட்டுநாயக்கன் சமுதாய பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இதில் 150-க்கும் மேற்பட்டோர் பள்ளி கல்வி பயின்று வருகின்றனர். அவர்களுக்கு உயர்கல்வி படிப்பதற்கு ஜாதி சான்றிதழ் தேவைப்படும் நிலையில் ஆன்லைன் மூலம் வருவாய் துறையினரிடம் சாதி சான்றிதழ் கோரி விண்ணப்பம் செய்த நிலையில் அவர்களது விண்ணப்பம் பலமுறை நிராகரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மாணவ-மாணவிகளுடன் சுமார் 50 க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனுவில்: எங்களது சமுதாயத்தைச் சேர்ந்த சுமார் 150 குடும்பங்களுக்கு சாதிசான்றிதழ் இதுவரை வழங்கப்படவில்லை.இதனால் பள்ளி செல்லும் குழந்தைகள் மேற்படிப்புக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. அரசு எங்களுக்கு மற்ற சமுதாயத்தினரை போல பல்வேறு சலுகைகளை வழங்கி வரும் நிலையில், சாதிசான்றிதழ் மற்றும் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. எனவே அதனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

Updated On: 18 April 2022 10:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?
  2. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  3. திருத்தணி
    திருத்தணி முருகன் கோவில் உண்டியல் திறப்பு:கிடைத்த காணிக்கை ரூ.1 கோடி
  4. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  5. வீடியோ
    பெத்தப் பிள்ளைய பாதுகாக்க வக்கில்ல ! #veeralakshmi #savukkushankar...
  6. கோவை மாநகர்
    கோவை அருகே நச்சுப் புகையை வெளியேற்றிய தார் தொழிற்சாலை செயல்பட தடை
  7. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  8. கோவை மாநகர்
    கோவை சிறையில், சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த யூடியூபர் பெலிக்ஸ்...
  9. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை வானில் பறக்க காத்திருக்கும் ஜோடிகளுக்கு வாழ்த்துகள்..!
  10. வீடியோ
    நாங்கள் காத்துகொண்டு இருக்கிறோம் ! #annamalai #annamalaibjp ...