/* */

ஒமிக்ரான் வைரஸ் எதிராலெி: நெல்லையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

நெல்லை மாவட்டத்தில் ஒமிக்ரான் வைரஸ் பரவலைத் தடுக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் விஷ்னு.

HIGHLIGHTS

ஒமிக்ரான் வைரஸ் எதிராலெி: நெல்லையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்
X

நெல்லை ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

நெல்லை மாவட்டத்தில் ஒமிக்ரான் வைரஸ் பரவலைத் தடுக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ரெயில் நிலையத்தில் சிறப்பு மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு ஆர்.டி.பி.ஆர் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.

ஒமிக்ரான் வைரஸ் பரவிவரும் நிலையில் அதனைத் தடுக்கும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக நெல்லை மாவட்டத்தில் ரெயில் நிலையத்தில் சிறப்பு மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு வெளி மாநிலம் மற்றும் வெளியூர்களில் இருந்து வரும் நபர்களுக்கு ஆர்.டி.பிசி.ஆர் சோதனை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இங்கு கொரோனா தடுப்பூசியும் போட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த முகாமினை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்:-

ஒமிக்ரான் வைரஸ் பரவலை தடுக்க நெல்லை மாவட்டத்தில் சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெளி நாட்டில் இருந்து நெல்லை வரும் நபர்களை விமான நிலையங்களிலேயே தகவல்களும் திரட்டபட்டு அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை ஒமிக்ரான் வைரஸ் யாருக்கும் நெல்லை மாவட்டதில் கண்டறியபடவில்லை. நெல்லை ரயில் நிலையங்களில் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணியும் நடந்து வருகிறது. தற்போது நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 100 படுக்கைகள் ஆக்சிஜன், வெண்டிலேட்டர் வசதியுடன் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் 3 இடங்களில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படுவதால் ஆக்சிஜன் தட்டுபாடு வர வாய்ப்பில்லை. ரயில் நிலையங்களில் எடுக்கப்படும் பரிசோதனைக்கு 24 மணி நேரத்தில் முடிவுகள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கல்லூரிகளில் மாணவ- மாணவிகள் தடுப்பூசி செலுத்த சிறப்பு முகாமும் நடத்தப்படும், கொரோனா குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் இதுவரை 72 சதவீதம் முதற்கட்ட தடுப்பூசி செலுத்தியுள்ளனர். மெகா மற்றும் சிறப்பு முகாம்களுக்கு மக்கள் மத்தியில் விழிப்புணர்வு இருப்பதால் தொடர்ந்து அதனை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார் .

Updated On: 4 Dec 2021 4:26 AM GMT

Related News

Latest News

  1. நத்தம்
    நத்தத்தில் அதிமுக சார்பில், நீர் மோர் பந்தல் திறப்பு: முன்னாள்...
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. ஆன்மீகம்
    காற்றையாவது காசு கொடுக்காமல் வாங்குவோம்..!
  5. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 82 கன அடியாக அதிகரிப்பு
  6. சினிமா
    டி.எம்.எஸ்.,சுக்கு உதவிய சிவாஜி..!
  7. சினிமா
    இளையராஜா பாடிய முதல் பாடலே ட்ரெண்ட் செட்டானது... எப்படி?
  8. தமிழ்நாடு
    ஓய்வூதிய பலன்கள் கிடைப்பதை உறுதி செய்ய அரசு அறிவுறுத்தல்..!
  9. அரசியல்
    நரேந்திரமோடி- வாஜ்பாய் ஒற்றுமைகள் என்ன?
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்