/* */

நெல்லை கல்குவாரி விபத்து: பாறைக்குள் சிக்கிய ஓட்டுனரை மீட்கும் பணி தீவிரம்

கல்குவாரியில் கற்குவியலுக்குள் சிக்கி இருக்கும் ஓட்டுனரை மீட்கும் பணி தொடங்கியது. பாறைகளை வெடி வைத்து தகர்த்து உடலை மீட்க திட்டம்.

HIGHLIGHTS

நெல்லை கல்குவாரி விபத்து: பாறைக்குள் சிக்கிய ஓட்டுனரை மீட்கும் பணி தீவிரம்
X

பாறைகளை வெடி வைத்து தகர்த்து சிக்கிய உடலை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நெல்லை குவாரியில் 6வது நாளாக மீட்பு பணிகள் கற்குவியலுக்குள் சிக்கி இருக்கும் ஓட்டுனரை மீட்கும் பணி தொடங்கியது. பாறைகளை வெடி வைத்து தகர்த்து சிக்கிய உடலை மீட்க திட்டம்.

திருநெல்வேலி மாவட்டம் பொன்னாக்குடி அருகே அடைமிதிப்பான்குளம் பகுதியில் உள்ள குவாரியில் கடந்த சனிக்கிழமை இரவு நிலச்சரிவு ஏற்பட்டு பாறைகள் சரிந்து விழுந்தது. இதில் அப்போது பணியில் இருந்த ஆறு ஊழியர்கள் சிக்கிக்கொண்டனர். மூன்று ஹிட்டாச்சி இயந்திரம் மற்றும் இரண்டு லாரிகளும் கற்குவியலுக்குள் மூழ்கியது. நேற்று முன்தினம் வரை மூவர் உயிர் இழந்த நிலையிலும், இருவர் உயிருடனும் மீட்கப்பட்டனர். ஆறாவது நபரான ஓட்டுனர் ராஜேந்திரனை மீட்கும் பணி நேற்று காலை முதல் நடைபெற்று வருகிறது. அவர் உடல் இருக்கும் பகுதியை அடையாளம் காண்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. துர்நாற்றம் வீசும் இடங்களில் தீயணைப்பு மீட்பு படையினர் மற்றும் பேரிடர் மீட்பு படையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் ஒரு குறிப்பிட்ட பாறைக்கு அடியில் துர்நாற்றம் வீசுவது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அந்தப் பாறையை வெடி வைத்து தகர்த்து உடலை மீட்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனை அடுத்து பாறையில் 32 க்கு மேற்பட்ட இடங்களில் துவாரங்கள் போடப்பட்டு அதில் வெடி மருந்துகள் செலுத்தப்பட்டுள்ளது. ஒரு கிலோவிற்கும் அதிகமான வெடி மருந்து பாறையில் வைக்கப்பட்டு தகர்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பாறைகளை அகற்றி விட்டு உடலை மீட்கும் பணி நடைபெறும் பாறை வெடி வைத்து தகர்க்கப்பட்டது. இதற்காக குவாரியின் 500 மீட்டர் சுற்றளவிற்குள் யாரும் நுழைய கூடாது என காவல்துறையினர் உத்தரவு பிறப்பித்தனர். ஒலிபெருக்கி மூலமாக தொடர்ந்து அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர். குவாரியில் வெடி வெடிக்க செய்யப்பட்டது. இதன் அடுத்த கட்டமாக ரெடினால் சுடப்பட்ட கற்களை அகற்றும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட உள்ளனர். இதன் பின்பு ஆறாவது உடல் இருப்பது தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 20 May 2022 11:43 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அழகிய மேற்கோள்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    கோடையின் மகிழ்ச்சியைப் பறைசாற்றும் தமிழ்க் கவிதைகள்!
  3. லைஃப்ஸ்டைல்
    காதல் கொஞ்சம்..! கவலை கொஞ்சம்..!
  4. ஆன்மீகம்
    சிவபெருமானின் அருள்பெறும் பொன்மொழிகள்..!
  5. லைஃப்ஸ்டைல்
    பணத்தை சிக்கனமாக சேமிக்கும் யுக்திகள்!
  6. லைஃப்ஸ்டைல்
    போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்..! விழிப்புடன் இருங்க..!
  7. லைஃப்ஸ்டைல்
    உந்துதல் ஊற்றாகும் தமிழ் பழமொழிகள்!
  8. பொன்னேரி
    பெருமாள் - சிவன் நேருக்கு நேர் சந்திக்கும் ஹரிஹரன் சந்திப்பு விழா
  9. லைஃப்ஸ்டைல்
    பட்ஜெட் போடுங்க... பணத்தை சேமிங்க!
  10. சோழவந்தான்
    சோழவந்தான் விசாக நட்சத்திர ஆலயத்தில், மே.1-ம் தேதி குருப்பெயர்ச்சி:...