/* */

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக 28வது பட்டமளிப்பு விழா

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் இருபத்தி எட்டாவது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.

HIGHLIGHTS

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக 28வது பட்டமளிப்பு விழா
X

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் 28வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. 

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக இருபத்தி எட்டாவது பட்டமளிப்பு விழாவில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசுகையில், ஆராய்ச்சியுடன் கூடிய கல்வியாக உயர்கல்வி இருக்க வேண்டும். அந்த கல்வியானது சமுதாய மாற்றத்திற்கான வழிகாட்டியாக இருக்க வேண்டும். இந்தியாவின் சராசரியாக 21.1 சதவீதமாக உயர் கல்வி இருக்கும் நிலையில், தமிழகத்தில் உயர் கல்வியானது 41.4 சதவீதம் உயர்ந்துள்ளதாகவும், ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்களுக்கு கல்வியில் நிபுணத்துவம் பெற்ற மற்ற இந்திய பல்கலைக் கழகங்களில் இருந்து பயிற்சி அளிக்கத் திட்டம் என தெரிவித்தார்.

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் இருபத்தி எட்டாவது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு ஆளுநர் ஆர் .என். ரவி மற்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் கலந்துகொண்டு பட்டங்களை வழங்கினர்.

கடந்த 2019-20,2020-21 ஆகிய இரண்டு கல்வி ஆண்டில் பட்டம் படித்து முடித்தவர்களுக்கு பட்டங்களும் வழங்கப்பட்டது. இதில் நேரடியாக 1243 பேருக்கும், தங்கப் பதக்கங்கள் பெற்ற 204 பேருக்கும் பட்டங்கள் வழங்கப்பட்டன. கடந்த இரண்டு கல்வியாண்டில் மொத்தம் ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 284 பேர் பட்டம் பெற்றனர்.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பிச்சுமணி பேசும்போது:- பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சிக்காக தமிழக அரசு 20 கோடி ரூபாயில் நவீன தொழில்நுட்ப கருவிகளுடன் ஆய்வகம் ஏற்படுத்தி உள்ளதாகவும், தமிழக முதல்வரின் அறிவிப்பின்படி சுதந்திர போராட்ட வீரர் வ. உ. சிதம்பரனார் 150 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு வ.உ.சிதம்பரனார் இருக்கை பல்கலைக்கழகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் தென்மாவட்டங்களில் கீழடி, ஆதிச்சநல்லூர் போன்ற அகழ்வாராய்ச்சிகளில் தமிழகத்தின் தொன்மையான வரலாறு பண்பாடு வெளிப்படுத்தப்பட்டது. அதனடிப்படையில் பல்கலைக்கழகத்தில் அகழ்வாராட்சி கல்வி மையம் பல துறைகளுடன் இணைந்து அமைக்கப்பட்டு உள்ளது எனவும் தெரிவித்தார்.

திருவனந்தபுரம் தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இணைவு குல கழகத்தின் இயக்குனர் அஜய்கோஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பட்டமளிப்பு உரை நிகழ்த்தினார். அப்போது அப்போது அவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகை ஆட்டி வைத்த கொரோனா நோய்க்கான சிகிச்சை அளிப்பதற்கான தடுப்பூசிகளை கண்டுபிடிப்பதில் பல ஆராய்ச்சி கல்வி நிறுவனங்கள் முக்கியப் பங்கு ஆற்றியதால் இன்று அவை கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இந்திய ஜனத்தொகையில் இந்தியாவில் உள்ள முன்னணி கல்வி நிறுவனங்களான IITs,IISERs,NITs , போன்றவைகள் போதுமானதாக இல்லை அவற்றை அதிகரிக்கவேண்டும். அது போன்ற ஆராய்ச்சி நிறுவனங்களான CSIR,ISRO,BARC,DRDO,ICMR,ICAR போன்றவைகளையும் அதிகரிக்க வேண்டும் என்றார். தமிழக அரசு உயர் கல்வித்துறையில் பல மாற்றங்களை செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

தலைமை பேருரை ஆற்றிய தமிழக ஆளுநர்:- மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேலான பாரம்பரிய அறிவுடைய நமது பண்பாட்டுடைய கல்வியையும் ஒருங்கிணைத்து மருத்துவம் உள்ளிட்ட உயர் கல்வியில் பாடத்திட்டம் இருக்க வேண்டும் என்றார். மேலும் கல்வியில் ஆராய்ச்சி உடன் கூடிய படிப்புகள் இருக்க வேண்டும் பெரிய கனவாக கனவுகள் வேண்டும். அதை நிறைவேற்றும் வரை கடினமாக உழைக்க வேண்டும். தன்னம்பிக்கை ஒருபோதும் இழக்கக் கூடாது என்று தமிழக ஆளுநர் ஆர்.ன். ரவி தனது உரையில் தெரிவித்தார்.

Updated On: 15 Dec 2021 11:22 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு
  2. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  3. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  4. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  5. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  6. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  7. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  8. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  9. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  10. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...