/* */

நெல்லை: மாவட்ட அதிமுக இலக்கிய அணி ஆலோசனை கூட்டம்

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை அதிமுக இலக்கிய அணி வரவேற்கிறது.

HIGHLIGHTS

நெல்லை:  மாவட்ட அதிமுக இலக்கிய அணி ஆலோசனை கூட்டம்
X

நெல்லை மாவட்ட அதிமுக இலக்கிய அணி ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய வைகைச்செல்வன்

100 நாள் சாதனை என்று சொல்லிக் கொள்ளும் திமுக தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறது. ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை அதிமுக வரவேற்கிறது என்றார் முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் .

நெல்லை மாவட்ட அதிமுக இலக்கிய அணி ஆலோசனைக் கூட்டம் நெல்லை புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநகர் மாவட்ட செயலாளர் தசை கணேசராஜா தலைமை வகித்தார். இதில் முன்னாள் அமைச்சரும், அதிமுகவின் இலக்கிய அணி செயலாளருமான வைகைச் செல்வன் கலந்து கொண்டு உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மாவட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர், வைகைச்செல்வன் அளித்த பேட்டி: உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு கட்சி நிர்வாகிகளுக்கு உற்சாகம் ஏற்படுத்துவதற்காகவே இந்த கூட்டம் நடத்தப்பட்டது. உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. 100 நாட்கள் சாதனை என்று சொல்லிக்கொள்ளும் திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் தடுமாறி தடம் மாறி கொண்டிருக்கிறது.

எனவே இந்த நேரத்தில் அதிமுகவுக்கு தான் தங்கள் ஓட்டு என்ற நம்பிக்கையை மக்கள் வெளிப்படுத்தி வருகிறார்கள். எனவே ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு அமோகமாக உள்ளது. அதிமுக நிர்வாகிகள் மீது குறிப்பாக முன்னாள் அமைச்சர்கள் மீது தொடர்ச்சியாக வழக்குப்பதிவு செய்து மிரட்டல் தொணியை திமுக கையாண்டு வருகிறது. அதிமுக இந்த மிரட்டலுக்கு ஒருபோதும் அஞ்சாது. இதுபோன்ற வழக்குகளை நீதிமன்றத்தில் சந்திப்போம். என்று எங்கள் தலைவர்கள் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தெரிவித்துள்ளனர்.

அதைத்தான் நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். கொரோனா மூன்றாம் அலை கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இறப்பு எண்ணிக்கை குறைந்து வருவதால் தற்போது பள்ளிகளை திறக்க உள்ளனர். 50% மாணவர்களை வைத்து பள்ளிகள் நடத்தப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. இருப்பினும் பள்ளிகள் திறக்கும் அறிவிப்பு குறித்து அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். கொரோனா விதிமுறைகளை முழுமையாக பின்பற்றி பள்ளிகளை நடத்தினால் தான் நல்லது, இல்லாவிட்டால் மாணவர்களுக்கு ஆபத்தாக அமைந்து விடும்.

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கொரோனா இரண்டாம் அலையை தடுக்க தடுமாறியது. தடுப்பூசி பெறுவதில் சிக்கல், ஆக்சிஜன் தட்டுப்பாடு உட்பட பல்வேறு இடர்பாடுகளை அரசு சந்தித்ததால் மக்கள் உயிரிழப்பு அதிகரித்தது. திமுகவின் 100 நாள் ஆட்சி வேதனையாக தான் உள்ளது. தேர்தல் வாக்குறுதிகளை திமுக முழுமையாக நிறைவேற்றவில்லை.

வாக்குறுதிகளின் முழுமையான பலன்கள் மக்களுக்கு சென்றடையவில்லை. 100 நாட்களை நகர்த்துவது என்பதே அவர்களுக்குப் போதும், போதும் என்றாகி விட்டது. ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பதை மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. ஏனென்றால் நாடாளுமன்றத்துக்கு ஒரு தேர்தல், சட்ட மன்றத்திற்கு ஒரு தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் என எப்போதும் தேர்தல் வந்து கொண்டே இருக்கிறது. இதனால் அரசுக்கு செலவு தான் அதிகரிக்கிறது. எனவே இந்த திட்டத்தை அதிமுக வரவேற்கிறது. என்று தெரிவித்தார்.

கூட்டத்திற்கு கழக அமைப்புச் செயலாளர் சுதா பரமசிவம், அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், மாவட்ட மகளிரணி செயலாளர் ஜான்சிராணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர் சிவந்தி மகாராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 22 Aug 2021 5:57 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  2. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...
  3. வீடியோ
    🔴LIVE : சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட்! ஆளுநர் RN.ரவி சூசக...
  4. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  5. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  6. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  7. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  8. ஈரோடு
    மூளைச்சாவு அடைந்த நாமக்கல் கல்லூரி மாணவியின் உடல் உறுப்புகள் தானம்
  9. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  10. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது