/* */

நாரணம்மாள்புரம் பேரூராட்சியில் 15 வது வார்டு சமக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

நாரணம்மாள்புரம் பேரூராட்சி 15 வது வார்டில் போட்டியிடும் சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர் M.சுகந்தி தீவிர வாக்கு சேகரிப்பு.

HIGHLIGHTS

நாரணம்மாள்புரம் பேரூராட்சியில் 15 வது வார்டு சமக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு
X

நாரணம்மாள்புரம் பேரூராட்சியில் 15 வது வார்டில் மாமன்ற உறுப்பினர் பதவிக்கு சமத்துவ மக்கள் சார்பில் சுகந்தி வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.

திருநெல்வேலி மாவட்டம் நாரணம்மாள்புரம் பேரூராட்சியில் 15 வது வார்டில் மாமன்ற உறுப்பினர் பதவிக்கு சமத்துவ மக்கள் சார்பில் M.சுகந்தி தீப்பட்டி சின்னத்தில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பு.

திருநெல்வேலி மாவட்டத்தில் 17 பேரூராட்சிகளில் 273 வாதிகள் என மொத்தம் 397 பதவிகளுக்கு அறிவிக்கப்பட்டது.இதில் 9 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். இறுதியாக 388 பதவிகளுக்கு 1790 பேர் போட்டியிடுகின்றனர். இதில் நாரணம்மாள்புரம் பேரூராட்சி 15 வது வார்டு மாமன்ற உறுப்பினராக அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் M.சுகந்தி தீப்பெட்டி சின்னத்தில் போட்டியிடுகிறார்.

வேட்பாளர் எம் சுகந்தி சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உடன் அருகன்குளம் கீழூர், மேலூர், உச்சிமாகாளி அம்மன் கோவில் தெரு, பஜார் தெரு மற்றும் அருகன்குளம் ஆகிய கிராமங்களில் வீடு வீடாக சென்று தனக்கு வாக்களிக்கும்படி கேட்டுக் கொண்டார். கிராம மக்கள் வேட்பாளரிடம் தங்கள் பகுதியில் ரோடு மிகவும் மோசமாக உள்ளது. அதனை தங்களுக்கு சரி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அப்போது தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொது மக்களுக்கு வழங்கி தன்னை வெற்றி பெற செய்தால் உங்களது கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

தொடர்ந்து வேட்பாளர் M.சுகந்தி கூறும்போது:- நான் வெற்றி பெற்றால் 15வது வார்டு மக்களுக்கு அடிப்படை வசதிகளான பயணிகள் நிழற்குடை அமைத்து தருவது, சாலைகள், தெருவிளக்குகள், சீரமைப்பது, பொது கழிப்பிட வசதி செய்து தருவது, ரேஷன்கடை அமைத்துக் கொடுப்பது, சுற்றுச்சூழல் நலன் பாதுகாக்க துப்புரவு பணி சரியான முறையில் நடைபெறவும், போர் வாட்டர், தண்ணீர் தொட்டி வசதி செய்து தரவும் நடவடிக்கை எடுப்பேன் என்று உறுதி அளித்தார்.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் தலைமையில் (நட்சத்திர வெற்றி) வெங்கடேஷ், மாவட்ட துணைச் செயலாளர் அருள்மணி, மாநில செயற்குழு உறுப்பினர் சரத் கண்ணன், இசக்கிமுத்து, மாரிமுத்து, சீனிவாசன் தச்சை, ஆதிநாராயணன் கரையிருப்பு, நியூட்டன் டேனியல், எலிசபெத் உள்ளிட்ட பலர் வாக்கு சேகரிக்க உடன் சென்றனர்.

Updated On: 14 Feb 2022 4:48 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  2. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  3. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  4. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  5. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...
  6. வீடியோ
    Pakistan-ல் Rahul ஆதரவாளர்கள் அட்டகாசம் | புலம்பும் மூத்த Congress...
  7. குமாரபாளையம்
    குடிநீர் ஆதாரம் குறித்து நீரேற்று நிலையத்தை பார்வையிட்ட கலெக்டர்
  8. லைஃப்ஸ்டைல்
    போலி உறவுகளை காலி செய்யுங்கள்..! வேண்டாத சுமைகள்..!
  9. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை விர்ர்ர்... 5 நாட்களில் 70 பைசா உயர்வு
  10. வீடியோ
    2024க்கு பிறகு தேர்தல் கிடையாதா? பிரதமர் Modi பரபரப்பு வாக்குமூலம் !...