/* */

நெல்லை பேட்டையில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் மெகா நிலவேம்பு கசாயம் முகாம்

நெல்லை பேட்டையில் பொதுமக்களுக்கு எஸ்டிபிஐ கட்சி சார்பில் சிறப்பு நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

நெல்லை பேட்டையில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் மெகா நிலவேம்பு கசாயம் முகாம்
X

பேட்டையில் SDPI கட்சியின் சார்பாக மெகா நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் நடைபெற்றது.

பேட்டையில் SDPI கட்சியின் சார்பாக மெகா நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம்.

தற்போது பருவ மழை தொடர்ந்து பெய்து வருவதால் சளி, காய்ச்சல், இருமல் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. SDPI கட்சி சார்பாக பேட்டை 49 வது வார்டுக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் டெங்கு காய்ச்சல் மற்றும் மர்ம காய்ச்சலை தடுக்கும் வண்ணம் மெகா நிலவேம்பு கசாயம் வழங்கபட்டது. இம்முகாமை MGP பள்ளி வாசல் ஜமாத்தலைவர் ஜனாப். அல் அமீன் அப்துல் காதர் மற்றும் பொருளாளர் ஹாஜி லியாகத் அலிகான் ஆகியோர் துவங்கி வைத்தனர்.

MGP தெருக்கள், கருவேலன் குன்று தெரு, MGPசன்னதி தெரு, MGP கல்கட்டு தெரு, சாம்பபுரம வடக்கு தெரு, சாம்பபுரம், சித்தி விநாயகர் கோவில் தெரு ,மல்லிமால் தெரு காயிதே மில்லத் ரோடு,சேரன்மகாதேவி ரோடு பின்னிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று நிலவேம்பு கசாயம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.

இம்முகாமில் தொகுதி பொருளாளர் முகம்மது காசிம், பகுதி தலைவர் ஜெய்லானி, கிளை நிர்வாகிகள் அப்பாஸ், மீடியா நியாஸ் , மாலிக், அப்துல் ரஹ்மான் கோதரப்பா, SDTU ஆட்டோ சங்க நிர்வாகிகள் அல்லா பிச்சை ,ரபீக் ஆகியோர் கலந்து கொண்டு நிலவேம்பு கசாயத்தினை பொதுமக்களுக்கு விநியோகம் செய்தனர்.

Updated On: 22 Nov 2021 12:53 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    லாரி மூலம் குடிநீர் விநியோகம் செய்வதில் ஊழல் நடந்து வருகிறது : வானதி...
  2. அரசியல்
    திமுக எம்எல்ஏக்களுக்கு திடீர் உத்தரவு..!
  3. வீடியோ
    🔴LIVE : ஸ்ரீ ராஜ ராஜேஸ்வர சுவாமி கோவிலில் பாரத பிரதமர் மோடி தரிசனம்...
  4. கல்வி
    மத்திய பல்கலைக்கழகங்கள் பற்றி தெரியுமா மாணவர்களே..?
  5. கலசப்பாக்கம்
    அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு..!
  6. சுற்றுலா
    ஊட்டி போக போறீங்களா...? இதை படிச்சிட்டு மகிழ்ச்சியா போயிட்டு
  7. வந்தவாசி
    வந்தவாசி அருகே லாரி கவிழ்ந்து விபத்து..!
  8. வீடியோ
    என் வெற்றிக்கு யார் காரணம் ! விழுப்புரம் மாணவி அசத்தல் பதில் !...
  9. வீடியோ
    பழுக்க கொட்டப்பட்ட அனல் கங்கின் மேல் தீமிதித்த பக்தர்கள்!#devotional...
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் பசுமை பந்தல் அமைப்பு