/* */

திருநெல்வேலி வார்டு எண் 18 & 19 பகுதிகளில் மேயர் சரவணன் ஆய்வு

அரியநாயகிபுரம் குடிநீர் குழாய் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு பொது மக்களுக்கு அதிக அளவில் குடிநீர் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்யப்படும் என மேயர்

HIGHLIGHTS

திருநெல்வேலி வார்டு எண் 18 & 19 பகுதிகளில் மேயர் சரவணன் ஆய்வு
X

திருநெல்வேலி மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன் திருநெல்வேலி மண்டலம் வார்டு எண் 18 மற்றும் 19 பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.

திருநெல்வேலி மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன், வார்டு எண் 18 மற்றும் 19 பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். பேட்டை அலகு அலுவலகம் எண் 3,4 (வார்டு எண் 17,18,19,20,21,22) பார்வையிட்டு சுமார் 25க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டார். வார்டு எண் 19, நாராயணசாமி கோவில் தெருவில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் நல மையத்தினை பார்வையிட்டு அங்குள்ள சமையலறை மற்றும் கழிவறை சுத்தமாக வைக்க அறிவுறுத்தினார்.

பின்னர், அப்பகுதியில் மரக்கன்றுகளை நட்டார்கள். விரிவாக்கம் அடைந்து வரும் பகுதிகளான கோல்டன்சிட்டி, லெட்சுமிநகர், கைவினைஞர் தெரு மற்றும் வீரபாகுநகர் பகுதிகளை பார்வையிட்டு அப்பகுதி மக்களின் கோரிக்கையின்படி உடனடியாக மின்விளக்குகள் அமைக்கவும், குடிநீர் வசதிகள் ஏற்படுத்தி தரவும் அறிவுறுத்தப்பட்டது.

வார்டு எண் 18 செந்தமிழ்நகர் பகுதியில் வணக்கத்திற்குரிய மேயர் பி.எம்.சரவணன் ஆய்வு மேற்கொள்ளும் போது அங்குள்ள குடியிருப்புதாரர்கள் குடிநீர், அடிபம்பு, சாலை வசதி, தெருவிளக்கு ஏற்படுத்தி தர கோரிக்கை வைத்தனர். அப்பகுதி மக்களின் கோரிக்கையினை கேட்டறிந்த மேயர் தற்போது தெருக்களில் பாதாள சாக்கடை இணைப்புக்கு குழி தோண்டப்பட்டுள்ள பணியை விரைவாக முடித்து சாலைகள் சரி செய்யப்பட்டவுடன் குடிநீர் வசதி, தெரு விளக்கு வசதிகள் செய்து தரப்படும் அரியநாயகிபுரம் குடிநீர் குழாய் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு பொது மக்களுக்கு அதிக அளவில் குடிநீர் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது, துணை மேயர் கே.ஆர்.ராஜூ உடனிருந்தார். நெல்லை மண்டல தலைவர் மகேஷ்வரி மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் மா.சுப்பிரமணியன், அ.அல்லாபிச்சை மற்றும் சுகாதார அலுவலர் முருகேசன், சுகாதார ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் 18வது வட்ட செயலாளர் தர்வேஸ்மைதீன், துணை செயலாளர் மோகன், மாநகர பிரதிநிதி வேல்பாண்டியன் வட்ட பிரதிநிதி முருகன், அவைத்தலைவர் சேர்மணன். கட்சி பிரமுகர்கள் அரசு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 6 May 2022 1:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  2. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  3. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  4. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  5. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  6. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்
  7. பட்டுக்கோட்டை
    இரண்டுக்குள்ளே விஷயம் இருக்கு தெரிஞ்சுக்கங்க..! அசத்தும் விவசாயி..!
  8. வேலைவாய்ப்பு
    குரூப் 4- வி.ஏ.ஓ தேர்வு முழு சிலபஸ் டவுன்லோட் செய்வது எப்படி?
  9. வேலைவாய்ப்பு
    ரயில்வே பாதுகாப்பு எஸ்.ஐ., ஆக விருப்பமா?
  10. லைஃப்ஸ்டைல்
    போலி பெஸ்டி கூட ஏற்படுவது சண்டையா..கோபமா..?