/* */

நெல்லையப்பர் கோவில் அன்னதான திட்டம் பற்றி சமூக வலைதளங்களில் பரவும் தகவல்

நெல்லையப்பர் கோவில் அன்னதான திட்டம் பற்றி சமூக வலைதளங்களில் பரவும் தகவல்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

HIGHLIGHTS

நெல்லையப்பர் கோவில் அன்னதான திட்டம் பற்றி சமூக வலைதளங்களில் பரவும் தகவல்
X

நெல்லையப்பர் கோவில் பைல் படம்.

பஞ்ச சபைகளில் ஒன்றான தாமிர சபை நெல்லையில் நெல்லையப்பர் கோவிலில் அமைந்துள்ளது.

இந்த நெல்லையப்பர் கோவில் திருநெல்வேலி மாவட்டத்தில், திருநெல்வேலி டவுணின்(நகரின்) நடுவே கம்பீரமாக காட்சி அளிக்கும் கோவில். இது திருநெல்வேலி மாவட்டத்தின் தலைமை கோயில். இந்த கோவிலில் அன்னதான விஷயத்தில் திருநெல்வேலி மாவட்டத்திலேயே மிகவும் மோசமான கோயிலாக இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

இங்குள்ள அன்னதான மண்டபத்தில் தினமும் மதியம் 12 மணி அளவில் அன்னதானம் நடைபெறும். இது தமிழக அரசால் நியமிக்கப்பட்டு நடத்தப் பட்டு வருகிறது.இங்கு தினமும் அன்னதானம் சாப்பிட செல்லும் பக்தர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் ஏராளமாக இருப்பதாக பக்தர்கள் கூறுகிறார்கள்.

இங்கே அன்னதானம் வழங்கும் பணியாளர்கள் அன்னதானம் சாப்பிட வரும் மக்களிடம் மிகவும் அநாகரீகமாக நடந்து கொள்வதாகவும், அதிகாரம் படைத்தவர்கள் போல் பேசி அங்கு உணவு அருந்த வரும் மக்களின் மனதை மிகவும் காயப்படுத்துகிறார்கள் என்பது பக்தர்களின் முக்கியமான குற்றச்சாட்டாக உள்ளது.

தினமும் 500 நபர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தின் கீழ் இங்கு அன்னதானம் நடந்து வருகின்றது. இங்குள்ள அன்னதான மண்டபம் ஒரே சமயத்தில் வெறும் 150 பேரே சாப்பிடும் வசதியில் அமைக்கப்பட்டுள்ளது. அதனால் 150 பேரை மட்டும் முதலில் சாப்பிட அனுமதிக்கப்படுகின்றனர். இதில் 90% பெண்களும், வெறும் 10% சதவீதம் ஆண்களும் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். . ஆண்களிலும் வயதானவர்களும், உடல்நிலை சரியில்லாதவர்களும் இருக்கின்றனர். இந்த செயலால் வயதான ஆண்களும் உடல்நிலை சரியில்லாத ஆண்களும் மிகவும் சிரமப்படுகின்றனர்.

இந்த பிரச்சனைகள் எல்லாவற்றையும் தாண்டி உள்ளே சென்றால் அங்கே தான் சாப்பிடச் செல்லும் பக்தர்களுக்கு பெரிய அவமானமே காத்திருக்கின்றது.

அது என்ன என்றால். வயிறு நிறைய பக்தர்களுக்கு சாப்பாடு கொடுப்பதில்லை. முதலில் பரிமாறப்படும் உணவுகளில் ஒரு கூட்டு, ஒரு ஊறுகாய் இவைகளுடன். கொஞ்சமாக சோறு வைத்து சாம்பார் ஊற்றுகின்றனர். இவைகளும் சுவை சுமாராகவே இருக்கின்றது.

அது பரவாயில்லை வயிறு நிறைந்தால் போதும் என்று நினைத்தால். இரண்டாவது முறை வைக்கும் சாதம் ரசம் மற்றும் மோர் இவைகளுக்கு சேர்த்தே வைக்கப்படுகின்றது. அதுவும் கொஞ்சமாகத்தான் வைக்கின்றனர். கூட்டும், ஊறுகாயும் குறைவாகத்தான் வைக்கின்றார்கள். அதையும் இரண்டாவது முறை கேட்டால் பரிமாறும் பணியாளர்கள் கத்தி பேசி ஊரைக் கூட்டுகிறார்கள்.

ஐயா கூட கொஞ்சம் சோறு வையுங்கள் என்று கேட்டால் பரிமாறும் வேலைக்காரர்கள் மிகவும் கேவலமான முறையில் கத்தி பேசி எல்லோர் முன்னிலையும் அன்னதானம் அருந்துவர்களை கேவலப்படுத்துகின்றனர்.

500 நபர்களுக்கு உணவு என்றால் வயிறு நிரம்ப உணவு கொடுக்க வேண்டும் அல்லவா ஆனால் இவர்கள் சாப்பிட வரும் பக்தர்களுக்கு அரை குறையான சாப்பாடு கொடுத்து விட்டு. மீதி உணவுகளை இவர்கள் வெளி நபர்களுக்கு விற்கின்றார்களா அல்லது இவர்கள் வீட்டிற்கு கொண்டு செல்கிறார்களா அல்லது போலி கணக்கு காட்டுகிறார்களா என்று தெரியவில்லை எனவும் பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தினமும் 500 நபர்களுக்கு உணவு என்றால் இங்கே 500 நபர்கள் தினமும் உணவு அருந்த செல்வதில்லை மீதி உணவுகளை இவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதும் கேள்விக்குறியாக தான் உள்ளது.

மொத்தத்தில் அன்னதானம் என்பது புண்ணியத்திற்காக செய்யப்படுவது. திருநெல்வேலி மாவட்டத்தின் தலைமை கோவிலான நெல்லையப்பர் கோவிலில் அன்னதானம் செய்கிறோம் என்ற பெயரில். கோவிலுக்கு பாவத்தை சேர்த்து வைக்கின்றனரா? என்கிற கேள்வி தான் உணவு அருந்தி விட்டு செல்லும் பலருக்கும் ஏற்படுகிறது.

இங்கே நடந்து வரும் ஊழல்களை எல்லாம் சரி செய்து கோவிலுக்கு ஏற்படும் அவ பெயர்களை நீக்கி ஒழுங்கான முறையில் மக்களுக்கு வயிறு நிறைய உணவு அளித்து கோவிலுக்கு புண்ணியத்தை சேர்க்கும்படி.தமிழக அரசிடம் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம். நன்றி வணக்கம் சிவாய நமஹ என்ற கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Updated On: 19 Oct 2022 5:47 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    மழை வேண்டி திருவாசகத்தை சுமந்தபடி கிரிவலம்
  2. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  3. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  4. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  5. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  6. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  7. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  8. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  9. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  10. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்