/* */

நெல் கொள்முதல் நிலையத்தை காணவில்லை என்று விவசாயிகள் போராட்டம்

விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் தாமிரபரணி ஆற்றில் நெல்லைக் கொட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

நெல் கொள்முதல் நிலையத்தை காணவில்லை என்று விவசாயிகள்  போராட்டம்
X

நெல்கொள்முதல் நிலையத்தை காணவில்லை என்று கூறி தாமிரபரணி ஆற்றில் நெல்லைக் கொட்டி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை மாவட்டம், படப்பை குறிச்சியில் செயல்பட்டு வந்த நெல் கொள்முதல் மையத்தை காணவில்லை எனக் கூறி விவசாயிகள் நெல் மூட்டைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து தாமிரபரணி ஆற்றில் நெல்லைக் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்மாவட்டங்களில் அறுவடை பணிகள் துவங்கியுள்ள நிலையில் போதிய நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவில்லை என்று கூறி திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு நெல்லைக் கொட்டியும், தாமிரபரணி ஆற்றில் நெல்லைக் கொட்டியும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்..

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பிசான சாகுபடி அறுவடைப் பணிகள் துவங்கியுள்ளன. குறிப்பாக தாமிரபரணி மணிமுத்தாறு ஆற்றுக்கால் பாசன விவசாயிகள் நெல் அறுவடை பணிகளை துவங்க உள்ள நிலையில், இதுவரை போதுமான அளவிற்கு நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாத நிலை உள்ளது. பல்வேறு இடங்களிலும் நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் திருநெல்வேலி மாநகராட்சியை ஒட்டியுள்ள பொட்டல், படப்பை குறிச்சி, கோட்டூர், பெரியபாளையம், திம்மராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க வேண்டும் என்று கூறி வேளாண்துறை அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளனர். ஆனால் ஆள் பற்றாக்குறை இயந்திர பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களை கூறி நெல் கொள்முதல் நிலையம் இதுவரை அமைக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு கொட்டி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து தாமிரபரணி ஆற்றின் மூலம் விளைவித்த நெல்லை தாமிரபரணி ஆற்றில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப் படாததால் அடிமாட்டு விலைக்கு நெல்லை விற்க வேண்டிய அவல நிலையில் உள்ளதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

Updated On: 12 March 2022 10:00 AM GMT

Related News