/* */

அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு "சமத்துவ நாள்" உறுதி மொழி.

அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு தலைமையில் "சமத்துவ நாள்” உறுதி மொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.

HIGHLIGHTS

அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு  சமத்துவ நாள் உறுதி மொழி.
X

ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு தலைமையில் "சமத்துவ நாள்" உறுதி மொழி எடுக்கப்பட்டது

திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை புதிய கட்டிடத்தில் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு, மருத்துவர்கள், மருத்துவ கல்லூரி மாணவ, மாணவிகள் "சமத்துவ நாள்" உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.

மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு தலைமையில் திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல்வகாப். முன்னாள் சட்டமன்றப் பேரவைத்தலைவர் ஆவுடையப்பன் ஆகியோர் முன்னிலையில் அம்பேத்கர் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி "சமத்துவ நாள்" உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 13.04.2022 அன்று அம்பேத்கர் அவர்களுடைய பிறந்த நாளான ஏப்ரல் 14 - ஆம் நாளை சமத்துவ நாளாக கொண்டாட அரசு முடிவெடுத்துள்ளது. என முதலமைச்சர் சட்டமன்ற விதி எண்.110 - ன் கீழ் அறிவித்தார்.

அதன்படி இன்று சமத்துவ நாள் உறுதிமொழியான சாதி வேறுபாடுகளுக்கு எதிராகவும், சாதிகளின் பெயரால் நடக்கும் சமூக அடக்கு முறைகளுக்கு எதிராகவும், தொடர்ந்து போராடி ஒதுக்கப்பட்டவர்களுடைய உரிமைகளுக்காகவும், ஒடுக்கப்பட்டுவர்களுடைய சமத்துவத்திற்காகவும், வாழ்நாள் எல்லாம் குரல் கொடுத்து எளிய மக்களின் உரிமைகளைப்பற்றி விழிப்புணர்வை ஊட்டிய நம் அரசியலமைப்புச் சட்டத்தை வகுத்துத் தந்த அம்பேத்கருடைய பிறந்த நாளில் சாதி வேறுபாடுகள் ஏதுமில்லாத சமத்துவ சமுதாயத்தை அமைக்க நாம் அனைவரும் பாடுபடுவோம் என்றும், சகமனிதர்களைச் சாதியின் பெயரால் ஒருபோதும் அடையாளம் காணமாட்டேன் என்றும், சக மணிதர்களிடம் சமத்துவத்தை வாழ்நாள் முழுவதும் கடைபிடிப்பேன் என்றும் உறுதி ஏற்கிறேன். என்ற உறுதிமொழியினை அரசு அலுவலர்கள், மருத்துவர்கள், மருத்துவகல்லூரி மாணவ- மாணவிகள் அனைவரும் எடுத்துக்கொண்டனர்.

இந்தநிகழ்வில் மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.ரவிச்சந்திரன், செயற்பொறியாளர் மு.சங்கரலிங்கம், மாவட்ட ஆட்சியர் அலுவலக மேலாளர் வெங்கடாச்சலம், உதவி செயற் பொறியாளர் அருள் நெரிச்செல்வன், உதவிப் பொறியாளர் எஜின் ராகுல் உட்பட அரசு அலுவலர்கள், மருத்துவர்கள், மருத்துவ கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 14 April 2022 3:21 PM GMT

Related News

Latest News

  1. கல்வி
    பணம் சம்பாதிக்கணும் இல்லையா..? எந்த படிப்பை தேர்வு செய்யலாம்..?
  2. இராஜபாளையம்
    ராஜபாளையத்தில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    அப்பா இல்லாத ஏக்கம்: கவிதைகள் மற்றும் மேற்கோள்கள்
  4. வீடியோ
    மத்தியில் கூட்டாட்சி ! மாநிலத்தில் தன்னாட்சி Seeman!#seeman #ntk...
  5. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனுத்தாக்கல்
  6. கோவை மாநகர்
    குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: எஸ். பி....
  7. கல்வி
    மதிப்பெண் மட்டுமே தகுதி அல்ல..! பெற்றோரே கவனியுங்கள்..!
  8. ஈரோடு
    பிளஸ் 2 தேர்வு: ஈரோடு மாவட்டத்தில் 97 பள்ளிகள் நூறு சதவீத தேர்ச்சி
  9. வீடியோ
    😎உருவாகிறது ஆட்டோகாரன் New Version ! 🔥தெறிக்கப்போகும் Opening Song🔥...
  10. கோவை மாநகர்
    திமுக அரசை விமர்சிப்பவர்களை கைது செய்யும் அடக்குமுறையை கைவிட வேண்டும்...