/* */

நெல்லையில் வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருநெல்வேலி மாவட்டத்தில் 59.65 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தெரிவித்தார்.

HIGHLIGHTS

நெல்லையில் வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
X

நெல்லையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் அறைக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம் 388 வார்டுகளில் பதிவான வாக்குகள் நாளை (22.02.2022) என்னப்படுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் வே.விஷ்ணு தகவல்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திருநெல்வேலி மாநகராட்சி பகுதிக்கு வாக்கு எண்ணும் மையமான திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு எற்பாடுகளை மாவட்ட ஆட்சித் தலைவர் வே.விஷ்ணு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னா அவர் கூறியதாவது :- திருநெல்வேலி மாநகராட்சியில் உள்ள 55 வார்டுகளுக்கும், 3 நகராட்சிகளில் உள்ள 69 வார்டுகளுக்கும் மற்றும் 17 பேரூராட்சிகளில் உள்ள 273 வார்டுகள் என மொத்தம் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 397 வார்டுகளில் பேரூராட்சிகளில் போட்டியின்றி தேர்வான 9 வார்டுகளை தவிர்த்து மீதமுள்ள 388 வார்டுகளுக்கு தேர்தல் 19.02.2022 அன்று நடைபெற்றது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் 5 வாக்கு எண்ணும் மையங்களில் மூன்றடுக்கு பாதுகாப்புடன் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. நாளை காலை 8.00 மணி முதல் வாக்கு எண்ணிக்கை பாதுகாப்பாக நடைபெறவுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் மாநகராட்சியில் உள்ள ஆண் வாக்காளர்கள் 206049 நபர்களும், பெண் வாக்காளர்கள் 215067 நபர்களும், பிற இனத்தவர்கள் 40 நபர்களும் மொத்தம் 421156 நபர்கள் உள்ளனர். இதில் வாக்குப்பதிவு செய்த ஆண் வாக்காளர்கள் 108896 நபர்களும், பெண் வாக்காளர்கள் 112 நபர்களும், மொத்தம் 220899 நபர்கள் மாநகராட்சியில் தனது வாக்குகளை வாக்குப்பதிவு செய்துள்ளனர். 3 நகராட்சியில் உள்ள ஆண் வாக்காளர்கள் 48846 நபர்களும், பெண் வாக்காளர்கள் 52509 நபர்களும், பிற இனத்தவர்கள் 5 நபர்களும் மொத்தம் 101360 நபர்கள் உள்ளனர். இதில் வாக்குப்பதிவு செய்த ஆண் வாக்காளர்கள் 32032 நபர்களும், பெண் வாக்காளர்கள் 36102 நபர்களும் மொத்தம் 68134 நபர்கள் நகராட்சியில் தனது வாக்குகளை வாக்குப்பதிவு செய்துள்ளனர்.

17 பேரூராட்சியில் உள்ள ஆண் வாக்காளர்கள் 115057 நபர்களும், பெண் வாக்காளர்கள் 121858 நபர்களும், பிற இனத்தவர்கள் 11 நபர்களும், மொத்தம் 236926 நபர்கள் உள்ளனர். இதில் வாக்குப்பதிவு செய்த ஆண் வாக்காளர்கள் 77445 நபர்களும், பெண் வாக்காளர்கள் 86498 நபர்களும், பிற இனத்தவர்கள் 1 நபர்களும் மொத்தம் 163944 நபர்கள் பேரூராட்சியில் தனது வாக்குகளை வாக்குப்பதிவு செய்துள்ளனர்.

அதன்படி திருநெல்வேலி மாவட்டத்தில் 59.65 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்கு எண்ணிக்கை 5 மையங்களில் நடைபெறவுள்ளது. வாக்குபெட்டிகள் பாதுகாப்பு அறையும் Strong Room 24 ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் திருநெல்வேலி மாநகராட்சி, சங்கர் நகர் பேரூராட்சி, நாரணம்மாள்புரம் பேரூராட்சிகளில் உள்ள வாக்குப்பதிவுக்கு வாக்கு எண்ணும் மையம் அரசு பொறியியல் கல்லூரி பாளையங்கோட்டையில் 6 வாக்குபெட்டிகள் பாதுகாப்பு அறையும் (Strong Room), அம்பாசமுத்திரம் நகராட்சி, விக்ரமசிங்கபுரம் நகராட்சி, கல்லிடைகுறிச்சி பேரூராட்சி, மணிமுத்தாறு பேரூராட்சிகளில் உள்ள வாக்குப்பதிவுக்கு வாக்கு எண்ணும் மையம் ஏ.வி.ஆர்.எம்.வி. அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி அம்பாசமுத்திரத்தில் 4 வாக்குபெட்டிகள் பாதுகாப்பு அறையும் (Strong Room) களக்காடு நகராட்சி, மூலக்கரைப்பட்டி பேரூராட்சி, நாங்குநேரி பேரூராட்சி, திசையன்விளை பேரூராட்சிகளில் உள்ள வாக்குப்பதிவுக்கு வாக்கு எண்ணும் மையம் புனித பிரான்சிஸ் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, நம்பி நகர், நாங்குநேரியில் 4 வாக்குபெட்டிகள் பாதுகாப்பு அறையும் (Strong Room) சேரன்மகாதேவி பேரூராட்சி, கோபாலசமுத்திரம் பேரூராட்சி, மேலச்செவல் பேரூராட்சி, முக்கூடல் பேரூராட்சி, பத்தமடை பேரூராட்சி, வீரவநல்லூர் பேரூராட்சிகளில் உள்ள வாக்குப்பதிவுக்கு வாக்கு எண்ணும் மையம் பெரியார் மேல்நிலைப்பள்ளி சேரன்மகாதேவியில் 6 வாக்குபெட்டிகள் பாதுகாப்பு அறையும் (Strong Room) ஏர்வாடி பேரூராட்சி, திருக்குறுங்குடி பேரூராட்சி, பணகுடி பேரூராட்சி, வடக்கு வள்ளியூர் பேரூராட்சிகளில் உள்ள வாக்குப்பதிவுக்கு வாக்கு எண்ணும் மையம் பாத்திமா மகளிர் மேல்நிலைப்பள்ளி வள்ளியூரில், 4 வாக்குபெட்டிகள் பாதுகாப்பு அறையும் (Strong Room) 24 பாதுகாப்பு அறைகள் அமைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. வாக்கு எண்ணும் மையங்களில் மாநகர காவல் ஆணையாளர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களால் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும், வாக்கு எண்ணும் மையங்களில் வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க மாநகராட்சிக்கு ஒரு மண்டலத்திற்கு 3 பேர் என 12 நுண்பார்வையாளர்களும் மற்றும் ஒவ்வொரு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் 3பேர் என மொத்தம் 72 நுண் பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் வாக்கு எண்ணும் நாளான நாளை 22.02.2022 அன்று அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களில் கண்காணிப்பு பணிகளை செய்வார்கள். வாக்கு எண்ணும் மையங்களில் அதிகபட்சமாக மாநகராட்சிக்கான வாக்கு எண்ணும் மையத்தில் மட்டும் 14 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கைக்கான வேட்பாளர்களின் முகவர்கள் கண்டிப்பாக கொரோனா பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். இரண்டு தவணை தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். முககவசம் அணிந்திருக்க வேண்டும் மற்றும் தனிநபர் இடைவெளி பின்பற்ற வேண்டும். என மாவட்ட ஆட்சித் தலைவர் வே.விஷ்ணு தெரிவித்தார்.

Updated On: 21 Feb 2022 1:18 PM GMT

Related News

Latest News

  1. மயிலாடுதுறை
    அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. வணிகம்
    ஓய்வுக்காலத்தில் நிம்மதியாக வாழ வேண்டுமா? அடடே ஐடியா!
  4. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  5. திருவண்ணாமலை
    மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  7. அவினாசி
    பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...
  8. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  9. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  10. திருவண்ணாமலை
    வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, ஆட்சியர் அறிவுரை