/* */

நெல்லையில் முதல்நிலை மீட்பாளர் 4000 பேருக்கு பேரிடர் மீட்பு பயிற்சி

நெல்லை மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நிலை மீட்பாளர் 4000 பேருக்கு முதல்கட்ட பேரிடர் பயிற்சி அளிக்கும் பணி நடைபெற்றது.

HIGHLIGHTS

நெல்லையில் முதல்நிலை மீட்பாளர் 4000 பேருக்கு பேரிடர் மீட்பு பயிற்சி
X

நெல்லை மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நிலை மீட்பாளர் 4000 பேருக்கு முதல்கட்ட பேரிடர் பயிற்சி அளிக்கும் பணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்து எதிரொலி - நெல்லை மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நிலை மீட்பாளர் 4000 பேருக்கு முதல்கட்ட பேரிடர் பயிற்சி அளிக்கும் பணி நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் தீத்தடுப்பு ஒத்திகை, இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பதில் தொடர்பான பயிற்சி, மின் கசிவினால் ஏற்படும் விபத்து உள்ளிட்ட வகைகளுக்கான பயிற்சி அளிக்கப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெரிய தீ விபத்து ஏற்பட்டது. இதில் பலர் சிக்கி தவித்தனர். இந்த நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் தீ தடுப்பு கருவிகள் செயல்பாட்டில் இருப்பதை உறுதி செய்ய சுகாதாரத் துறை உத்தரவு பிறப்பித்திருந்தது. மேலும் மாவட்டம் முழுவதும் முதல்நிலை மீட்பாளர்களுக்கான பயிற்சி அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டது.

அதனடிப்படையில் நெல்லை மாவட்டத்தில் முதல்நிலை மீட்பாளர்களாக மாவட்டம் முழுவதும் இருந்து 4 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.ஆவர்களை குறுவட்ட அளவில் பிரிக்கப்பட்டு பயிற்சி அளிக்கும் பணி நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி தலைமையில் நடைபெற்றது. இந்த பயிற்சி முகாமில் பேரிடர் காலங்களில் பயன்படுத்தக்கூடிய பொருட்கள் ஆள்துளை கிணறுகளில் சிக்கியவர்களை மிட்க பயன்படுத்தும் பொருட்கள், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க பயன்படுத்தக் கூடிய பொருட்கள் உள்ளிட்டவைகள் காட்சிபடுத்தப்பட்டு, முடிந்தவுடன் அதனை தொடர்ந்து பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய அதிகாரி வீரராஜ் பேரிடர் காலங்களில் முதல்நிலை மீட்பாளர்கள் செய்ய வேண்டிய பணிகள் குறித்து விளக்கம் அளித்தார்.

பின்னர் எரிவாயு சிலிண்டர் திடீரென தீப்பற்றினால் எவ்வாறு அணைக்கவேண்டும், விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் முறை, மின் கசிவினால் ஏற்படும் விபத்தை தடுக்கும் வழிமுறைகள் உள்ளிட்டவைகள் தத்ரூபமாக செய்து காட்டப்பட்டது. இந்த பயிற்சியில் நெல்லை மாவட்டத்தில் உள்ள 8 வட்டாட்சியர் அலுவலகங்களில் பணி செய்யும் முதல்நிலை மீட் பாளர்களாக தேர்வு செய்யப்பட்ட வட்டாட்சியர், துணை வட்டாட்சியர் உள்ளிட்ட ஐந்து நபர்கள் வீதம் 40 பேருக்கும், மாவட்டத்திலுள்ள செஞ்சிலுவைச் சங்கங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த நபர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இவர்கள் இந்த பயிற்சியை நிறைவு செய்த பின் குழுக்களாகப் பிரிந்து அடுத்த கட்ட பயிற்சியை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Updated On: 5 May 2022 6:34 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  2. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  3. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  4. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  5. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  6. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  8. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  9. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  10. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு