/* */

அரசியல் கட்சி பிரமுகர்களுடன் தேர்தல் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம்

திருநெல்வேலியில் அரசயில் கட்சி பிரமுகர்களுடன் தேர்தல் அதிகாரியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

அரசியல் கட்சி பிரமுகர்களுடன் தேர்தல் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம்
X

திருநெல்வேலியில் அரசயில் கட்சியினருடன் மாவட்ட தேர்தல் அதிகாரி ஆலோசனை செய்தார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் தேர்தல் அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான விஷணு தலைமையில் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது..

இந்த கூட்டத்தில் நெல்லை மாநகராட்சி ஆணையாளர் விஷ்ணு சந்திரன், நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன், நெல்லை மாநகர மேற்கு மண்டல துணை ஆணையாளர் சுரேஷ் குமார் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் தேர்தலை அமைதியான முறையில் நடத்துவது தொடர்பாக தேர்தல் விதிமுறை மீறல்கள் இல்லாமல் செயல்படுவது தொடர்பாகவும், தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்படுவது தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு தெரிவித்ததாவது-

நெல்லை மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 3 நகராட்சி, 17 பேரூராட்சிகள் இருப்பதாகவும், நெல்லை மாவட்டத்திலுள்ள நகர்ப்புற உள்ளாட்சி களில் மொத்தம் 394 வார்டுகள் இருப்பதாகவும் தெரிவித்தார்.

நெல்லை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை அமைதியாக நடத்த அனைத்து விதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. பறக்கும் படை அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படும்.

நெல்லை மாநகராட்சி பகுதியில் உள்ள நான்கு மண்டலங்களுக்கும் தலா ஒரு பறக்கும் படை வீதம் நான்கு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல நெல்லை மாவட்டத்தில் உள்ள மூன்று நகராட்சிகளுக்கு 3 பறக்கும் படை குழுவும், 17 பேரூராட்சிகளுக்கு 10 பறக்கும் படை குழுவும் என மொத்தம் 17 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பறக்கும் படை குழுக்கள் நாளை அதிகாலை முதல் வாகன தணிக்கை உள்ளிட்ட கண்காணிப்பு பணியில் ஈடுபடும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை நாளை முதல் செயல்படும். மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் மொத்தமாக 274 வாக்குச்சாவடிகள் பதட்டமானவையாக கண்டறியப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் தெரிவித்ததாவது-

நெல்லை மாவட்டத்தில் 23 சோதனை சாவடிகள் நகர்ப்புற தேர்தல் கண்காணிப்புக்காக அமைக்கப்பட்டு ஆயிரத்து 600 போலீசார் நெல்லை மாவட்டத்தில் உள்ள நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என தெரிவித்தார். அதேபோல மாநகராட்சி பகுதிகளில் உள்ள சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு 1168 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் எனவும் தெரிவித்தார்.

Updated On: 27 Jan 2022 3:16 PM GMT

Related News

Latest News

  1. இராஜபாளையம்
    ராஜபாளையத்தில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பா இல்லாத ஏக்கம்: கவிதைகள் மற்றும் மேற்கோள்கள்
  3. வீடியோ
    மத்தியில் கூட்டாட்சி ! மாநிலத்தில் தன்னாட்சி Seeman!#seeman #ntk...
  4. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனுத்தாக்கல்
  5. கோவை மாநகர்
    குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: எஸ். பி....
  6. கல்வி
    மதிப்பெண் மட்டுமே தகுதி அல்ல..! பெற்றோரே கவனியுங்கள்..!
  7. ஈரோடு
    பிளஸ் 2 தேர்வு: ஈரோடு மாவட்டத்தில் 97 பள்ளிகள் நூறு சதவீத தேர்ச்சி
  8. வீடியோ
    😎உருவாகிறது ஆட்டோகாரன் New Version ! 🔥தெறிக்கப்போகும் Opening Song🔥...
  9. கோவை மாநகர்
    திமுக அரசை விமர்சிப்பவர்களை கைது செய்யும் அடக்குமுறையை கைவிட வேண்டும்...
  10. வானிலை
    தமிழ்நாட்டில் நாளை, நாளை மறுநாள் கனமழை எச்சரிக்கை...!