/* */

கழிவு நீரோடை ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி காங்கிரஸ் கட்சியினர் ஆட்சியரிடம் மனு

நெல்லை மாநகர பகுதிகளில் உள்ள கழிவுநீர் ஓடை ஆக்கிரமிப்புகளை சீரமைக்க கோரி காங்கிரஸ் கட்சி சார்பில் ஆட்சியரிடம் மனு.

HIGHLIGHTS

கழிவு நீரோடை ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி காங்கிரஸ் கட்சியினர் ஆட்சியரிடம் மனு
X

நெல்லை மாநகராட்சி பகுதிகளில் உள்ள கழிவு நீரோடை ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி காங்கிரஸ் கட்சி சார்பில் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

நெல்லை மாநகராட்சி பகுதிகளில் உள்ள கழிவு நீரோடை ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி காங்கிரஸ் கட்சி சார்பில் ஆட்சியரிடம் மனு.

நெல்லை மாநகர சாலைகளில் கழிவுநீர் ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி திருநெல்வேலி மாநகர மாவட்ட காங்கிரஸ் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் கட்சியினர் ஏராளமானோர் மாவட்ட ஆட்சியர் விஷ்ணுவிடம் புகார் மனு கொடுத்தனர்.

மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:- நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை, டவுண் பகுதிகளில் முக்கிய சாலைகளான எஸ்.என்.ஹைரோடு, திருவனந்தபுரம் சாலை, தெற்கு பைபாஸ் ரோடு, சேரன்மகாதேவி ரோடு ஆகிய பகுதிகளில் பல வருடங்களுக்கு முன்பு மழைநீர் செல்வதற்கு கழிவுநீர் ஓடை இருபுறமும் இருந்தது. தற்போது ஆக்கிரமிப்பாளர்கள் அடுக்குமாடி கட்டிடங்கள் கட்டி ஓடையினை அடைத்து கட்டியுள்ளனர்.

மேலும் பல இடங்களில் சிமெண்ட் தளம் அமைத்து மூடி வைத்துள்ளார்கள். தேவை இல்லாமல் குப்பையினை ஓடையில் போட்டு நிரப்பி விட்டார்கள். அதன் காரணமாக தற்போது மழை நீர் செல்வது தடைபட்டு உள்ளது. ஆகையால் பொதுமக்கள் நடந்து செல்வதற்கும், வாகனங்கள் செல்வதற்கும் தடை ஏற்பட்டு உள்ளது. ஆகவே மாவட்ட ஆட்சி தலைவர் விஷ்ணு போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பை அகற்றி மழைநீர் செல்வதற்கு வழி வகுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 1 Dec 2021 8:11 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மாமா.. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் உங்களை மறவேனே..!
  2. லைஃப்ஸ்டைல்
    தங்கை, தாவணி அணிந்த தாய்..!
  3. வீடியோ
    ஹிந்து இந்தியா-முஸ்லீம் இந்தியா என ராகுல் பிரிவினைவாதம் !#hindu...
  4. ஆன்மீகம்
    பேரருள் தருவாய் பெருமாளே..!
  5. லைஃப்ஸ்டைல்
    தீயவன் என்று அறிந்தால் ஒதுங்கிவிடு..!
  6. வீடியோ
    ManmohanSingh-கை கண்டித்த Thuglak சோ !அப்ப என்ன நடந்தது ?#thuglak...
  7. வீடியோ
    விடாமல் பொளந்து கட்டும் Modi | மீள முடியாமல் விழிபிதுங்கும் Congress |...
  8. அரசியல்
    400 இடங்கள் கிடைக்குமா? வடமாநிலங்களில் டல் அடிக்கும் பாஜக பிரச்சாரம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று 107.6 டிகிரி வெயில் பதிவு
  10. வால்பாறை
    வறட்சி காரணமாக டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து 20 வளர்ப்பு யானைகள்...