/* */

நெல்லையில் கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை: ஆட்சியர் துவக்கி வைப்பு

தீபாவளி பண்டிகை காலத்தில் திருநெல்வேலி மண்டலத்தில் 2021க்கு ரூ.5.80/- கோடி விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

நெல்லையில் கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை: ஆட்சியர் துவக்கி வைப்பு
X

கோ-ஆப்டெக்ஸ் காந்திமதி விற்பனை நிலையத்தில் தீபாவளி-2021 சிறப்பு தள்ளுபடி முதல் விற்பனையை மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.

கோ-ஆப்டெக்ஸ் காந்திமதி விற்பனை நிலையத்தில் தீபாவளி-2021 சிறப்பு தள்ளுபடி முதல் விற்பனையை மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.

திருநெல்வேலி மாவட்டம், சந்திப்பு பேருந்து நிலையம் அருகில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் காந்திமதி விற்பனை நிலையத்தில் தீபாவளி-2021 சிறப்பு தள்ளுபடி முதல் விற்பனையை மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு குத்துவிளக்கு ஏற்றி இன்று (22-10-2021) துவக்கி வைத்தார். தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் கடந்த 86 ஆண்டுகளாக தமிழக கைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் இரகங்களை கொள்முதல் செய்து இந்தியா முழுவதும் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலமாக விற்பனை செய்து நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலை வாய்ப்பினை வழங்கி பேருதவி புரிந்து வருகிறது.

காலத்திற்கேற்ற வகையில் புதிய உத்திகளைக் கையாண்டு பல புதிய வடிவமைப்புகளில் கோ- ஆப்டெக்ஸ் சேலைகள் மற்றும் இதர இரகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையின்போது தமிழக அரசு வழங்கும் 30 சதவீதம் சிறப்புத் தள்ளுபடி விற்பனை திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றது. இந்த சிறப்பு விற்பனைக்காக புதிய வடிவமைப்புடன் கூடிய கோவை மென்பட்டு புடவைகள், காஞ்சிபுரம், ஆரணி, தஞ்சை போன்ற பகுதிகளில் உற்பத்தி செய்யப்பட்ட பட்டுபுடவைகள், திருபுவனம் பட்டு சேலைகள் தமிழகத்தின் பல்வேறு r நெசவாளர்களின் கைவண்ணத்தில் உருவான பருத்தி சேலைகள், போர்வைகள், படுக்கை விரிப்புகள், தலையனை உறைகள், வேட்டி, லுங்கி, துண்டு மற்றும் ஏற்றுமதி இரகங்கள் ஏராளமாகத்தருவிக்கப்பட்டுள்ளன.

கடந்த தீபாவளி 2020 பண்டிகை காலத்தில் திருநெல்வேலி மண்டலத்தில் ரூ.2.91 கோடி லட்சங்கள் விற்பனை செய்யப்பட்டது. தற்போது தீபாவளி 2021க்கு ரூ.5.80/- கோடி விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. திருநெல்வேலி கோ-ஆப்டெக்ஸ் காந்திமதி விற்பனை நிலையத்தில் தீபாவளி 2020ல் ரூ.1.93 கோடி விற்பனை செய்யப்பட்டது. தற்போது தீபாவளி 2021க்கு ரூ.3.50 கோடி விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் "கனவு நனவு திட்டம்" என்ற சேமிப்பு திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. இதன்படி 10 மாத சந்தா தொகை வாடிக்கையாளர்களிடமிருந்து பெறப்பட்டு 11வது மற்றும் 12வது மாத சந்தா தொகையை கோ-ஆப்டெக்ஸ் செலுத்தி மொத்த முதிர்வு தொகைக்கு தேவைப்படும் துணிகளை 20 சதவீதம் அரசு தள்ளுபடியுடன் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிகழ்ச்சியில் கோ-ஆப்டெக்ஸ் திருநெல்வேலி மண்டல மேலாளர் மு.முத்துகுமார், ரா.சிவசுப்பிரமணியன், துணை மண்டல மேலாளர் (தணிக்கை)) எஸ்.ராமச்சந்திரன், இரக மேலாளர், அரசு அலுவலர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழா ஏற்பாடுகளை காந்திமதி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலைய விற்பனை மேலாளர் ஜி.ராமசுப்பிரமணியன் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.

Updated On: 22 Oct 2021 11:14 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  2. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  3. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  4. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  5. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  6. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  7. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்
  8. வீடியோ
    😍கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா😍| Kavin-ன் எல்லைமீறிய அட்டகாசமான...
  9. வீடியோ
    4 ஸ்பின்னர்கள் எதற்கு ? Rohit சொன்ன ரகசியம் !#rohitsharma #teamindia...
  10. லைஃப்ஸ்டைல்
    முடங்கிக்கிடந்தால் சிலந்திக்கூட சிறை பிடிக்கும்..!