/* */

சொத்து வரி உயர்வை கண்டித்து நெல்லையில் பாஜக ஆர்ப்பாட்டம்.

நெல்லையில் பாஜக சார்பில் மாநில அரசின் சொத்து வரி உயர்வை கண்டித்தும், வரி விதிப்பை திரும்பப் பெறக் கோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

சொத்து வரி உயர்வை கண்டித்து நெல்லையில் பாஜக ஆர்ப்பாட்டம்.
X

சொத்துவரி உயர்வை கண்டித்து பாஜக சார்பில் முன்னாள் எம்பி .சசிகலா புஷ்பா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

தமிழக அரசு சொத்து வரியை உயர்த்தியதை கண்டித்து பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் தமிழக பாஜக சார்பில் முன்னாள் எம்பி .சசிகலா புஷ்பா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட பொறுப்பாளர் கட்டளை ஜோதி உட்பட மாவட்ட நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டு மாநில அரசின் சொத்து வரி உயர்வை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் முன்னாள் எம்பி. சசிகலா புஷ்பா கூறுகையில்,

தமிழகத்தில் அடிதட்டு மக்கள் பாதிக்கப்படகூடிய வகையில் 150 சதவீதம் வரி உயர்த்தப்பட்டுள்ளது. எதற்கெடுத்தாலும் மத்திய அரசின் மீது திமுக அரசு பொய் சொல்லி வருகிறது. எதிர்கட்சி தலைவராக இருந்த போது சொத்துவரி உயர்வுக்கு மிக அதிகமாக வரி உயர்த்தப்பட்டதாக கண்டித்து ஸ்டாலின் பேசினார். ஆளும்கட்சியான பின்னர் திமுக மக்கள் வயித்தில் அடிக்கும் நிலையை செய்கிறது.

தமிழக வருவாய்க்காக தமிழர் பாரம்பரிய உடையை மறந்து கோட்டு, சூட்டுடன் துபாய் சென்ற தமிழக முதல்வர் துபாயில் இருந்து வருவாய் கொண்டு வருவதாக சொன்னதை போல் சொத்துவரியை உயர்த்தாமல் பல ஆயிரம் கோடியை வேறு வழியில் கொண்டு வரட்டும். தமிழ்க மக்கள் வாக்களித்து விட்டனர். இனி அவர்கள் தேவையில்லை என்ற எண்ணத்தில் வரி உயர்வு செய்யப்பட்டுள்ளது.

திமுக ஆட்சி வந்து ஒரு வருடமாகியும் எந்த பலனும் இல்லை. 5 வருடமாக வரும் வரும் என சொல்லிகொண்டே இருக்கின்றனர். தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியான பெண்களுக்கான ரூ. 1000 வரவில்லை., கல்வி கடன் தள்ளுபடி இன்னும் வரவில்லை. தேர்தலுக்காக சொன்ன 500 வாக்குறுதிகளும் வரும் வரும் என சொல்லிகொண்டிருந்தால், திமுக ஆட்சி பொய் வாக்குறுதிகளை கொடுத்ததற்காக கலைக்கப்பட்டு விடும் என தெரிவித்தார்.

Updated On: 8 April 2022 8:32 AM GMT

Related News

Latest News

  1. மயிலாடுதுறை
    அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. வணிகம்
    ஓய்வுக்காலத்தில் நிம்மதியாக வாழ வேண்டுமா? அடடே ஐடியா!
  4. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  5. திருவண்ணாமலை
    மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  7. அவினாசி
    பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...
  8. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  9. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  10. திருவண்ணாமலை
    வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, ஆட்சியர் அறிவுரை