/* */

நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண கொடியேற்றம் நடந்தது

திருநெல்வேலி நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

HIGHLIGHTS

நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண கொடியேற்றம் நடந்தது
X

நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவிலில் கொடியேற்றம் நடந்தது.

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் தேவாரப் பாடல் பாடப் பெற்ற திருத்தலம். பாண்டிய நாட்டுத் தலங்களில் ஒன்றாகும்.மூன்றாம் திருமுறை, ஏழாம் திருமுறை மற்றும் பன்னிரெண்டாம் திருமுறை, திருவிளையாடல் புராணம் ஆகிய நூல்களில் இந்த கோவில் பற்றி எழுத்தப்பட்டுள்ளன.கி.பி.ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்து சைவ சமயத்தை வளர்த்த திருஞானசம்பந்தர் திருநெல்வேலி என்ற பெயருடன் "திருநெல்வேலிப் பதிகம்" பாடியிருக்கிறார். அதனால் அதற்கு முன்பே "திருநெல்வேலி" என்ற பெயர் வழங்கத்தில் இருந்துள்ளதுதெளிவாகிறது.இத்திருத்தலம் ஏழாம் நூற்றாண்டுக்கு முன்பே சிறப்பு பெற்றது என்பது தெரியவருகிறது. தமிழ் நாட்டில், முக்கியமான ஐந்து அம்பலங்களில், இரண்டு அம்பலங்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளன. ஸ்ரீ நெல்லையப்பர் காந்திமதி ஆலயம் தாமிர அம்பலமாகவும், ஸ்ரீ குற்றால நாதர் ஆலயம் சித்திர அம்பலமாகவும் வழங்கப்படுகிறது.

ஸ்ரீ காந்திமதி நெல்லையப்பர் ஆலயம் ஆசியாவிலேயே மிகப்பெரிய சிவாலயமாக விளங்குகிறது. அம்பாளுக்கும் சுவாமிக்கும் தனித்தனியே கோவில்கள் எழுப்பப்பட்டு, இடையே அழகிய கல் மண்டபம் கொண்டு இணைக்கப்பட்டுள்ளது. அம்பாள் சன்னதியில் ஆயிரம் கால் மண்டபம் ஒன்று உள்ளது. கோவிலில் நுழைந்தவுடன் 10 அடி உயரத்திற்கு மேலாக ஒரு அழகான வெள்ளை நிற நந்தி சிலை உள்ளது சிறப்பு அம்சம் ஆகும்.

இவ்வளவு பிரசித்தி பெற்ற அருள்மிகு நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் திருக்கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். திருநெல்வேலியில் அருள்மிகு சுவாமி நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்பாள் திருக்கோவில் பழைமைவாய்ந்தது. சிறப்பு வாய்ந்த இத்திருக்கோவிலில் சுவாமி,அம்பாளுக்கு ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுகின்றன.அதன் ஒரு நிகழ்வாக காந்திமதி அம்பாள் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.திருவிழாவை முன்னிட்டு தங்க சப்பரத்தில் காந்திமதி அம்பாள் கொடிமரம் அருகில் ஏழுந்தருளினார். கொடிப்பட்டம் வீதி உலா வந்ததும் கொடிக்கு பூஜைகள் நடைபெற்றன. ஸ்ரீ காந்திமதி அம்பாள் சன்னதியில் அமைந்துள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.தொடர்ந்து கொடிமரத்திற்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் நடத்தப்பட்டதன.

பின்னர் கொடிமரமானது அலங்காிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஐப்பசி திருக்கல்யாண திருவிழா 15 தினங்கள் நடைபெறும். திருவிழா நாட்களில் தினமும் காலை மற்றும் இரவு ஸ்ரீ காந்திமதி அம்பாள் திருநெல்வேலி நகர் நான்கு ரதவீதிகளிலும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெறும். வருகின்ற 22.10.22 அன்று மதியம் 12.மணிக்கு மேல் 1.00 மணிக்குள் கம்பா நதி காட்சி மண்டபத்தில் சுவாமி அம்பாளுக்கு காட்சி கொடுக்கும் விழாவும், மறுநாள் 23.10.22 அன்று அதிகாலை 4.00 மணிக்கு மேல் 5.00 மணிக்குள் திருக்கோவில் ஆயிரங்கால் மண்டபத்தில் வைத்து திருக்கல்யாண விழா சிறப்பாக நடைபெறுகின்றது. பகலில் பட்டிணபிரவேசமும் தொடர்ந்து மூன்று நாட்கள் மாலையில் ஊஞ்சல் மண்டபத்தில் ஊஞ்சல் திருவிழாவும் நடைபெற்று நிறைவாக சுவாமி அம்பாள் வெள்ளி மாபிஷப வாகனத்தில் மறுவீடு பட்டணபிரவேச வீதிஉலாவும் நடைபெறுகின்றது. திருவிழா ஏற்பாடுகளை திருக்கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

Updated On: 12 Oct 2022 10:09 AM GMT

Related News

Latest News

  1. வந்தவாசி
    சித்திரை மாத கிருத்திகை: வந்தவாசி அருகே 108 பால்குட ஊா்வலம்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  3. வீடியோ
    தீவிரவாதிகள் விவகாரத்தில் மீண்டும் அம்பலப்பட்ட Congress ! வைரலாகும்...
  4. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  5. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  6. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  7. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  8. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  9. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  10. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!