/* */

வீடுகளில் முறைகேடாக குடிநீர் உறிஞ்ச பயன்படுத்திய 9 மின் மோட்டார்கள் பறிமுதல்

வீடுகளில் மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சிய 9 மின் மோட்டார்களை திருநெல்வேலி மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

வீடுகளில் முறைகேடாக குடிநீர் உறிஞ்ச பயன்படுத்திய 9 மின் மோட்டார்கள் பறிமுதல்
X
பறிமுதல் செய்யப்பட்ட மின்மோட்டார்களுடன் மாநகராட்சி ஊழியர்கள்


திருநெல்வேலி மாநகராட்சி பகுதிகளில் வீடுகளுக்கு சரியாக குடி தண்ணீர் வருவது இல்லை. அதற்கு காரணம் பல வீடுகளில் குடிநீர் குழாய்களில் ரகசியமாக மின்மோட்டார்களை இணைத்து குடி தண்ணீரை உறுஞ்சுகிறார்கள் என்று பொதுமக்கள் புகார் செய்தனர். குறிப்பாக பெரிய ஓட்டல்கள், தொழிற்சாலைகள், பங்களா வீடுகளில் இந்த முறைகோடுகள் அதிக அளவில் நடப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. இதைத்தொடந்து வீட்டு குடிநீர் இணைப்புகளில் மின்மோட்டார்களை பொருத்தி தண்ணீர் உறுஞ்சினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் சிவகிருஷ்ணமூர்த்தி எச்சரித்து இருந்தார்.

இதற்காக மாநகராட்சி மூலம் தனிக்குழு அமைத்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும் அப்போது குடிநீர் குழாயில் இருந்து நேரடியாக குடிநீர் பெறப்படுவது கண்டறியப்பட்டாலோ, வீட்டு குடிநீர் இணைப்புகளில் சட்ட விரோதமாக மின்மோட்டார் பொருத்தி குடிநீர் உறுஞ்சுவது கண்டறிபட்டாலோ, மேற்படி கட்டடத்திற்கான குடிநீர் இணைப்பானது நிரந்தமாக துண்டிப்பு செய்யப்படுவதோடு குற்றவியல் நடவடிக்கையும் தொடரப்படும் எனவும் மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்து இருந்தார்.

இந்நிலையில் சட்டத்திற்கு புறம்பாக வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் மின்மோட்டார் வைத்து குடிநீர் உறுஞ்சுவதை கண்டறிந்து நடவடிக்கை எடுத்திட திருநெல்வேலி மாநகராட்சி உதவி செயற்பொறியாளர்கள் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு குழுவானது தச்சநல்லூர் மண்டலம் வார்டு 1 நல்மேய்ப்பர் நகர், குறிஞ்சி மெயின் ரோடு, ரோஜா தெரு ஆகிய பகுதி வீடுகளில் ஞாயிற்றுக்கிழமை அன்று சோதனை நடத்தினார்கள். மாநகராட்சி சார்பாக அமைக்கப்பட்ட சிறப்பு குழுவை சார்ந்த உதவி செயற்பொறியாளர் லெனின், இளநிலை பொறியாளர் ஜெயகணபதி மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டு சட்டத்திற்கு புறம்பாக மின்மோட்டார் மூலம் குடிநீர் உறுஞ்சிய 9 மின்மோட்டார்களை பறிமுதல் செய்தனர்.

இது குறித்து மாநகராட்சி ஆணையர் சிவகிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ள செய்தி குறிப்பில்:- திருநெல்வேலி மாநகராட்சி பகுதிகளில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் சட்டத்திற்குபுறம்பாக குடிநீர் உறுஞ்சுவது தண்டனைக்கு உரிய குற்றமாகும், மின்மோட்டார் வைத்து குடிநீர் உறுஞ்சுவதால் அப்பகுதி மக்களுக்கு சீரான குடிநீர் வழங்க இயலாத நிலை ஏற்படுகிறது.தொடர்ச்சியாக மின்மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சினால் வீட்டு உரிமையாளர்களிடத்தில் இருந்து மோட்டார்கள் பறிமுதல் செயவதுடன், அபராதம் விதிக்கப்படுவதுடன் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

மாநகராட்சி அதிகாரிகளின் இந்த நடவடிக்கையில் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சோதனையால் மற்ற வீடுகளுக்கு குடிதண்ணீர் தேவையான அளவுக்கு கிடைத்தது. இது போன்ற சோதனையை அதிகாரிகள் அடிக்கடி நடத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட 9 மின்மோட்டார்களையும் அதிகாரிகள் மாநகராட்சி அலுவலகத்துக்கு எடுத்து சென்றனர். இந்த சோதனையின் போது அசம்பாவிதம் ஏற்படுவதை தடுக்க போலலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Updated On: 9 Oct 2022 4:45 PM GMT

Related News

Latest News

  1. வந்தவாசி
    சித்திரை மாத கிருத்திகை: வந்தவாசி அருகே 108 பால்குட ஊா்வலம்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  3. வீடியோ
    தீவிரவாதிகள் விவகாரத்தில் மீண்டும் அம்பலப்பட்ட Congress ! வைரலாகும்...
  4. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  5. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  6. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  7. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  8. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  9. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  10. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!