/* */

ராதாபுரம் தொகுதியில் ரூ.2.25 கோடியில் நலத்திட்டங்கள்: சபாநாயகர் துவக்கி வைப்பு

பழவூரில் ரூ 90 லட்சம் மதிப்பீட்டில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனைக்கு சபாநாயகர் அப்பாவு அடிக்கல் நாட்டினார்.

HIGHLIGHTS

ராதாபுரம் தொகுதியில் ரூ.2.25 கோடியில் நலத்திட்டங்கள்: சபாநாயகர் துவக்கி வைப்பு
X

நெல்லை மாவட்டம் பழவூர், வடக்கன் குளம், தெற்கு கள்ளிகுளம் மற்றும் கூத்தன் குழியில் 2.25கோடி மதிப்பிலான மக்கள் நலத்திட்டங்களை சபாநாயகர் அப்பாவு துவக்கி வைத்தார்.

நெல்லை மாவட்டம் பழவூர், வடக்கன் குளம், தெற்கு கள்ளிகுளம் மற்றும் கூத்தன் குழியில் 2.25கோடி மதிப்பிலான மக்கள் நலத்திட்டங்களை சபாநாயகர் அப்பாவு துவக்கி வைத்தார்.

நெல்லை மாவட்டம் பழவூரில் ரூபாய் 90 லட்சம் மதிப்பீட்டில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். வடக்கன் குளத்தில் 67 லட்சம் மதிப்பீட்டில் அரசினர் ஆரம்ப சுகாதார நிலையம் புற நோயாளிகள்.பிரிவு புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா, தெற்கு கள்ளி குளத்தில் 34.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய கால் நடை மருந்தக கட்டிடதிற்கான அடிக்கல் நாட்டு விழா போன்ற நிகழ்ச்சிகளில் சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டார். பின்னர் கூத்தன் குழியில் 28 லட்சம் மதிப்பீட்டில் மீனவ மக்களின் நெடுநாள் கோரிக்கையான துணை சுகாதார நிலையத்தினையும் சபாநாயகர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.

நிகழ்ச்சியில் வள்ளியூர் யூனியன் துணைத்தலைவர் வெங்கடேஷ் தன்ராஜ் , பொதுப் பணித்துறை இன்ஜீனியர் (கட்டிட பராமரிப்பு பிரிவு ) சங்கரலிங்கம், வட்டார மருத்துவ அலுவலர் கோலப்பன், பொது பணித்துறை துணை இயக்குநர் கிருஷ்ண லீலா, இணை இயக்குனர். ஜான் பிரிட்டோ, மாவட்ட கவுன்சிலர். பாஸ்கர், மற்றும் சாந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Updated On: 5 April 2022 12:08 PM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    மழை வேண்டி திருவாசகத்தை சுமந்தபடி கிரிவலம்
  2. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  3. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  4. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  5. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  6. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  7. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  8. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  9. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  10. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்