/* */

ஸ்டெர்லைட் 2வது அலகிலிருந்து 24 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் கிடைக்க வாய்ப்பு-அமைச்சர் தகவல்.

துாத்துக்குடி ஸ்டெர்லைட் 2 வது அலகிலிருந்து 24 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் கிடைக்க வாய்ப்புள்ளது என தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

HIGHLIGHTS

ஸ்டெர்லைட் 2வது அலகிலிருந்து 24 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் கிடைக்க வாய்ப்பு-அமைச்சர் தகவல்.
X

அமைச்சர் அமைச்சர் தங்கம் தென்னரசு நெல்லையில் ஆய்வு.

நெல்லை-ஸ்டெர்லைட் இரண்டாவது மையத்தில் 24 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக அமைச்சர் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் நியாய விலை கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் பெட்ரோல் பங்கில் பணிபுரியும் ஊழியர்கள் போன்று களப் பணியாற்றும் நபர்களுக்கு தடுப்பூசி போடும் சிறப்பு பணிகள் நடைபெற்றது. நெல்லை மாவட்டத்திற்கு கொரோனா தடுப்பு பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இந்த பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அமைச்சர் முன்னிலையில் ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது ஆய்வுக்குப் பிறகு அமைச்சர் தங்கம் தென்னரசு பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில்:-

நெல்லை மாவட்டத்தில் நாளொன்றிற்கு 5000 பேருக்கு தடுப்பு ஊசி செலுத்த நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.மாற்று திறனாளிகளுக்கு தடுப்பூசி வீடுகளுக்கு சென்று செலுத்தும் பணி மாவட்டத்தில் நடந்து வருகிறது. கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 23% லிருந்து 13%மாக குறைந்துள்ளது. இதுவரை 1.32 லட்சம் பேருக்கு மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கர்பிணி பெண்களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு ஒருங்கிணைந்த தடுப்பூசி உற்பத்தி மையம் இயங்க பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதப்பட்டது.நேரடியாக மத்திய தொழில் வர்த்தக துறை அமைச்சரை சந்தித்து மனு அளிக்கபட்டது.மத்திய அரசு செங்கல்பட்டு மையம் தொடர்பாக 10 நாட்களுக்குள் பதிலளிப்பதாக சொல்லியுள்ளார்கள். அவரகளது பதிலை எதிர்நோக்கியுள்ளோம்.

ஸ்டெர்லைட் ஆலை 2 வது அலகில் ஆக்சிஜன் உற்பத்தியாகும் பட்சத்தில் தமிழகத்தின் தேவை பூர்த்தி செய்ய உதவியாக இருக்கும். கங்கை கொண்டானில் இருக்கும் தனியார் ஆக்சிஜன் உற்பத்தி அளவில் 80 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளது. விரைவில் ஆக்சிஜன் உற்பத்தி நடைபெறும்.

நெல்லையில்தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை தட்டுப்பாடு இருப்பதாக தெரியவந்தால் மாவட்ட ஆட்சியர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார.

Updated On: 31 May 2021 6:59 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாங்க டீ சாப்பிடலாம்..! அன்பின் உபசரிப்பு..!
  2. மயிலாடுதுறை
    என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி..!
  3. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால்...சிறுமுயலும் சிங்கமாகும்..!
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!