/* */

பாரதி முத்தமிழ் மன்றம் சார்பில் சித்திரை திருநாள் விழா

பாரதி முத்தமிழ் மன்றம் மற்றும் பாரதியார் உலகப் பொது சேவை நிதியம் சார்பில் சித்திரை திருநாள் விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

பாரதி முத்தமிழ் மன்றம் சார்பில் சித்திரை திருநாள் விழா
X

பாரதி முத்தமிழ் மன்றம் சார்பில் சித்திரைத் திருநாள் விழாவில் பங்கேற்றவர்கள்.

பாரதி முத்தமிழ் மன்றம் மற்றும் பாரதியார் உலகப் பொது சேவை நிதியம் சார்பில் சித்திரை திருநாள் விழா, கவிதை வாசிப்பு நிகழ்வு பாளையங்கோட்டை ஆக்ஸ்போ மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது. நிகழ்விற்கு பாரதியார் உலகப் பொதுச்சேவை நிதிய தலைவர் கல்வியாளர் அ.மரியசூசை தலைமை தாங்கினார். அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் சங்க மாநில தலைவர் கவிஞர். சுப்பையா இறை வணக்கம் பாடினார்.

பாரதி முத்தமிழ் மன்றத் தலைவர் கவிஞர். புத்தநேரி கோ.செல்லப்பா முன்னிலை வகித்தார். துணைப் பொதுச் செயலாளர் கவிஞர் சு.முத்துசாமி அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கவிதை வாசிப்பு நிகழ்விற்கு கவிஞர்.பாப்பாக்குடி இரா. செல்வமணி தலைமை தாங்கினார்.

இந்நிகழ்வில் பொதுச் செயலாளர் முனைவர் கவிஞர் கோ.கணபதி சுப்ரமணியன், கவிஞர்.சண்முக சுப்பிரமணியன், கவிதாயினி வேதிகா, கவிஞர் செ.ச.பிரபு, எழுத்தாளர் மு.வெ.ரா. ஆகியோர் கவிதை வாசித்தனர். நிகழ்வில் முன்னாள் துணை ஆட்சியர் தியாகராஜன், முன்னாள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சண்முகசுந்தரம், என்.பி.என்.கே கலை பண்பாட்டு மன்றம் சுரேஷ் அஸ்வின், தூய சவேரியார் கல்லூரி பேராசிரியர். ராகுல் கோல்டன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிறைவாக சோமசுந்தரம் நன்றி கூறினார்.

Updated On: 15 April 2022 9:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பன்முகத்திறனில் தனித்த அடையாளம், சட்டமேதை அம்பேத்கர்..!
  2. லைஃப்ஸ்டைல்
    நீதியின் பக்கம் நில்லுங்கள்..! நீதி கிடைக்கும்..!
  3. ஈரோடு
    ஈரோட்டில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை, பிரார்த்தனை
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை தொடர் உயர்வு
  5. வீடியோ
    🔴LIVE : வைரமுத்து இளையராஜா விவகாரம்! பொங்கி எழுந்த பாடலாசிரியர்...
  6. ஈரோடு
    சென்னிமலை எம்.பி.என்.எம்.ஜெ. பொறியியல் கல்லூரியில் தேசிய தொழில்நுட்பக்...
  7. வீடியோ
    கோவிலுக்கு செல்வதால் யாருக்கு லாபம்! #mysskin|#hinduTemple|#hindu |...
  8. லைஃப்ஸ்டைல்
    தோல்வி கண்டு துவளாதீர்..! வீழ்ச்சி எழுச்சிக்கான முயற்சி..!
  9. லைஃப்ஸ்டைல்
    உனை பிரியாத வரவேண்டும் என்னுயிரே..!
  10. ஈரோடு
    வெளிநாட்டில் வேலை: கொங்கு கலை அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு