/* */

நெல்லையில் 64 கிலோ போதை பொருட்கள் பறிமுதல்: 3 பேர் கைது

நெல்லை ஹைகிரவுன்ட் பகுதியில் தடை செய்யப்பட்ட 64 கிலோ போதை பொருட்கள் பறிமுதல். மூன்று பேர் கைது.

HIGHLIGHTS

நெல்லையில் 64 கிலோ போதை பொருட்கள் பறிமுதல்: 3 பேர் கைது
X

நெல்லை ஹைகிரவுன்ட் அரசு மருத்துவமனை அருகில் 64 கிலோ போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

நெல்லை ஹைகிரவுன்ட் அரசு மருத்துவமனை அருகில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் வைத்திருந்த 3 பேர் கைது. 62,000 மதிப்புள்ள 64 கிலோ போதை பொருட்கள் பறிமுதல்.

தமிழ்நாட்டில் போதை பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின் பேரில், தொடர் சோதனை நடத்தப்பட்டு தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் கஞ்சா போன்ற போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், நெல்லை மாநகரில் காவல் ஆணையாளர் சந்தோஷ் குமாரின் அறிவுறுத்தலின் பேரில், தனிப்படை போலீசார் மாநகரம் முழுவதும் ஆய்வு செய்து வருகின்றனர்.

அந்த வகையில் தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் காசிப்பாண்டியன் தலைமையிலான போலீசார் கொடுத்த ரகசிய தகவலின் பேரில் நெல்லை மாநகரம திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி ( ஹைகிரவுன்ட்) காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காந்திமதி பள்ளி பகுதியில், காவல் உதவி ஆய்வாளர் அன்னராஜா மற்றும் போலீசார் ரோந்து சென்ற போது மருத்துவமனை பேருந்து நிறுத்தத்தில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அடுத்த கல்லூரணி சாலையைச் சேர்ந்த ஜெயராம் (28), கடையத்தை சேர்ந்த பாஸ்கர் (35) மற்றும் நெல்லை மாவட்டம் முக்கூடல் சுப்பையா தெருவை சேர்ந்த ராஜ் (55) ஆகிய மூவரை பிடித்து விசாரணை செய்தனர். அவர்கள் வைத்திருந்த சாக்கு பைகளை சோதனை செய்ததில் தடை செய்யப்பட்ட சுமார் 64 கிலோ மதிப்புடைய குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து மூன்று பேர் மீது ஹைகிரவுண்ட் காவல் நிலைய ஆய்வாளர் ஞானராஜ் வழக்கு பதிவு செய்து, அவர்களிடமிருந்து ரூ 62,448 மதிப்புடைய சுமார் 64 கிலோ குட்கா மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். கைதான மூன்று பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Updated On: 27 April 2022 11:49 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  2. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  4. வீடியோ
    🔥 Delhi-யில் அடித்த Annamalai அலை!😳 மிரண்டுபோன BJP தலைமை |...
  5. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  6. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை
  7. நாமக்கல்
    பரமத்தி அருகே குடும்ப பிரச்சினையால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு ...
  8. உலகம்
    பூமி தன்னை பார்த்துக் கொள்ளும் ; மனிதனே உன்னை பார்த்துக்கொள்..!
  9. நாமக்கல்
    ப.வேலூரில் போலீசாருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி முகாம்..!
  10. க்ரைம்
    பொன்னேரி அருகே வீட்டின் முன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்...