/* */

மனப்பாடமாக 1330 திருக்குறளையும் கூறியபடி திருவள்ளுவர் ஓவியம் வரைந்த மாணவி

1330 திருக்குறளையும் மனப்பாடமாக சொல்லியபடியே திருவள்ளுவரின் ஓவியத்தை சுமார் ஒன்றரை மணி நேரத்தில் வரைந்து அசத்திய 7ம் வகுப்பு மாணவி.

HIGHLIGHTS

மனப்பாடமாக 1330 திருக்குறளையும் கூறியபடி திருவள்ளுவர் ஓவியம் வரைந்த மாணவி
X

நெல்லையில் 1330 திருக்குறளையும் ஒவ்வொரு அதிகாரத்துடன் மனப்பாடமாக கூறிக்கொண்டே 30 அடி உயர திருவள்ளுவர் ஓவியத்தை வரைந்த மாணவி லக்ஷணா 

நெல்லையில் 1330 திருக்குறளையும் ஒவ்வொரு அதிகாரத்துடன் மனப்பாடமாக கூறியபடியே 30 அடி உயர திருவள்ளுவர் ஓவியம் வரைந்து 7ம் வகுப்பு மாணவி அசத்தியுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த லக்ஷணா என்ற மாணவி அங்குள்ள தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். கொரோனா ஊரடங்கு காலத்தில் அவர் நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு வந்துள்ளார். கொரோனாவால் பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடத்தப்பட்டதால் மாணவி லக்ஷணா பாட்டி வீட்டில் தங்கியிருந்து, நெல்லை சிவராம் கலைக்கூடத்தில் ஓவியம் பயின்று வந்துள்ளார்.

திருவள்ளுவரின் மீது உள்ள ஈர்ப்பால் மாணவி லக்‌ஷனா 1330 திருக்குறளையும் மனப்பாடமாக கூறியபடியே திருவள்ளுவரின் பிரமாண்ட ஓவியத்தை வரைய முடிவு செய்தார். அதன்படி, நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வில் 13 அடி அகலம், 30 அடி உயரம் கொண்ட வெள்ளை துணியில், மாணவி லக்‌ஷனா திருக்குறளை ஒவ்வொரு அதிகாரத்துடன் மனப்பாடமாக கூறிக் கொண்டே, திருவள்ளுவரின் உருவத்தை பெயிண்ட் மூலம் வரைய தொடங்கினார். சுமார் ஒன்றரை மணி நேரத்தில் மாணவி லக்‌ஷனா 1330 குறளையும் மனப்பாடமாக கூறியதுடன், திருவள்ளுவரின் உருவத்தையும் வரைந்து முடித்தார். மாணவியின் இந்த புதிய முயற்சி அனைவரையும் ஈர்த்தது. லக்‌ஷனாவை சக மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கை தட்டி உற்சாகப்படுத்தினர்.

இதுகுறித்து, மாணவி லக்‌ஷனா கூறுகையில்: ஊரடங்கு காலத்தில் எனது பாட்டி வீட்டில் இருந்தபோது திருக்குறளை கற்றுக் கொண்டேன். கன்னியாகுமரி சென்றபோது அங்கிருந்த திருவள்ளுவர் சிலையை கண்டு வியத்து போனேன். அப்போது தான் அந்த சிலையை உருவாக்கிய முன்னாள் முதல்வர் கருணாநிதியை எனக்கு தெரியவந்தது. எனவே நான் திருவள்ளுவர் சிலையை வரைய மிகவும் ஆர்வமுடன் இருந்தேன். சிவராம் கலைக் கூடம் மூலம் எனது முயற்சிக்கு வெற்றி கிடைத்தது என்று தெரிவித்தார்.

Updated On: 28 Aug 2021 4:41 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒன்றாக இருப்பதன் சக்தி: திருமணம் பற்றிய மேற்கோள்கள்
  2. வீடியோ
    குஜராத்தில் பிடிபட்ட போதை பொருள் | H Raja பரப்பரப்பு பேட்டி |#hraja...
  3. லைஃப்ஸ்டைல்
    மாம்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து உண்பதின் அவசியம் என்ன..?...
  4. லைஃப்ஸ்டைல்
    10 ஆண்டு திருமண நாள் மேற்கோள்களும் விளக்கங்களும்
  5. நாமக்கல்
    திருச்செங்கோடு நகராட்சி குப்பைக்கிடங்கில் தீ விபத்து: மாவட்ட ஆட்சியர்...
  6. லைஃப்ஸ்டைல்
    காதல் கிளியே காதல் கிளியே, உன்னை நான் காதலிக்கலையே...! - மறைமுக...
  7. திருவள்ளூர்
    திருவள்ளூரில் கணவன் மற்றும் மனநலம் குன்றிய மகனுடன் மனு அளிக்க வந்த...
  8. வீடியோ
    Desperate ஆன SRH ஓனர் | பயந்து துள்ளி குதித்த Sakshi | #csk #srh...
  9. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் முயல் வேட்டையாடிய 10 பேர் கைது ரூ.1 லட்சம் அபராதம்
  10. லைஃப்ஸ்டைல்
    கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே - திருமண நாள் வாழ்த்துக்கள்