/* */

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் 113 ரவுடிகள் கைது: எஸ்பி தகவல்

நெல்லை மாவட்டத்தில் இந்த ஆண்டில் 40 லட்சம் மதிப்புள்ள 315 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக எஸ்பி மணிவண்ணன் தகவல்.

HIGHLIGHTS

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் 113 ரவுடிகள் கைது: எஸ்பி தகவல்
X

பாளையங்கோட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று 7 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 51 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்து உரிய நபர்களிடம் வழங்கப்பட்டது.

விநாயகர் சதுர்த்தி அன்று வீடுகளுக்கு முன்பு ஒன்றரை அடி சிலைகள் மட்டுமே வைக்க வேண்டும் அதற்கு மேல் உள்ள சிலைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. என்று நெல்லை மாவட்ட எஸ்பி மணிவண்ணன் பேட்டியில் தெரிவித்தார்.

நெல்லை மாவட்டத்தில் பல இடங்களில் செல்போன் திருடு போயுள்ளது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மக்கள் நெல்லை மாவட்ட காவல் துறையிடம் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை சமாதானபுரத்திலுள்ள மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று 7 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 51 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்து உரிய நபரிடம் காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் இன்று வழங்கினார். அப்போது செல்போன் தொலைந்தவர்களுக்கு மரக்கன்று அதனை நட்டு வளர்க்க வலியுறுத்தினார்.

இதைத் தொடர்ந்து நெல்லை மாவட்ட எஸ்பி மணிவண்ணன் நிருபர்களுக்கு பேட்டியில் கூறியதாவது:-

நெல்லை மாவட்டத்தில் இதுவரை 133 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பல்வேறு வழக்குகள் தொடர்பாக 392 பேர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 113 ரவுடிகளை கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளனர். விநாயகர் சதுர்த்தி திருவிழாவையாெட்டி வீட்டிற்கு முன்பு விநாயகர் சிலைகளை வைத்து கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி வீட்டுக்கு முன்பு ஒன்றரை அடி சிலை மட்டுமே வைக்க வேண்டும். அதற்கு மேல் உள்ள சிலைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டத்தில் கடந்த ஒரு ஆண்டில் 315 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவற்றின் மதிப்பு சுமார் 40 லட்ச ரூபாய் ஆகும். இதேபோல் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வங்கி கணக்கு விபரங்கள், ஏடிஎம் கார்டு விபரங்கள் கேட்டால் தயவுசெய்து கொடுக்க வேண்டாம். இணையதளம் மூலம் பொருட்களை வாங்கும்போது கவனமாக வாங்க வேண்டும். நம்பகமான இணைய தளத்தை பயன்படுத்தவும். விலை மலிவாக உள்ளது என நம்பகத்தன்மை இல்லாத இணையதளத்தை பயன்படுத்த வேண்டாம். எஸ்எம்எஸ் வாயிலாக பரிசுகள் விழுந்து இருப்பதாகவும் அல்லது தகவல்கள் கேட்டாலும் ஏமாந்து விடக்கூடாது.

சமூக வலைதளங்களை பயன்படுத்தும் போது கவனமுடன் கையாள வேண்டும். சமூக வலைத்தளங்களில் அறிமுகமில்லாத நபருடன் வீடியோ கால் செய்ய வேண்டாம். ஒருவேளை நீங்கள் இதன் மூலம் பணம் இழந்தால் கட்டணமில்லா 155 260 எண்ணுக்கு உடனடியாக தொடர்புகொண்டு விபரங்களை தெரிவிக்க வேண்டும் .உங்கள் புகாரை cybercrime.gov.in என்ற இணையதளத்திலும் புகார் செய்யலாம் என அவர் தெரிவித்தார்.

Updated On: 7 Sep 2021 6:42 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  2. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  3. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  4. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  5. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  6. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  7. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  8. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  9. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...
  10. கல்வி
    +2 க்கு பிறகு அடுத்தது என்ன? சாதித்து காட்டுவோம்!