Begin typing your search above and press return to search.
லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரம்: ஆடல், பாடல், மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சி
கோபாலசமுத்திரத்தில் லஞ்சம் வாங்குவதும், கொடுப்பதும் குற்றம் என்பது குறித்து ஆடல், பாடல் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
HIGHLIGHTS

ஆடல் பாடல் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்திய கலைஞர்கள்
26ம்தேதி முதல் வருகிற 1-ம் தேதி வரை லஞ்சம் ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி டாப் ராஜா ஏற்பாட்டில் கோபாலசமுத்திரம் மெயின் ரோட்டில் லஞ்ச- ஊழல் ஒழிப்பு குறித்த பாடல், நடனம் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
திருநெல்வேலி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை துணை கண்காணிப்பாளர் மெக்லரின் எஸ்கால் தலைமை வகித்தார். காவல் ஆய்வாளர் ராபின்ஞானசிங் முன்னிலை வகித்தார், சிறப்பு அழைப்பாளர்கள் நெருப்புத்தமிழன், நெல்லை ஜீவா, லட்சிய ஜனநாயக கட்சி மணி, பசுமை அறக்கட்டளை. நிவேக், சபரி வாசன், எவர்கிரீன் க்ளோப் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்கள். நிகழ்ச்சி ஏற்பாடுகளை டாப் டிவி ராஜா செய்திருந்தார்.