/* */

திருச்சியில் லஞ்சம் வாங்கிய ஹெட் சர்வேயருக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை

திருச்சியில் லஞ்சம் வாங்கிய ஹெட் சர்வேயருக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து திருச்சி கோர்ட்டு தீர்ப்பளித்தது.

HIGHLIGHTS

திருச்சியில் லஞ்சம் வாங்கிய ஹெட் சர்வேயருக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை
X

திருச்சியில் லஞ்சம் வாங்கிய ஹெட் சர்வேயருக்கு மூன்றாண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து ஊழல் மற்றும் கண்காணிப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

திருச்சி கொட்டப்பட்டு இந்திரா நகரை சேர்ந்தவர் சக்கரவர்த்தி. இவர் தமிழக காவல்துறையில் தலைமை காவலராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். இவருக்கு தற்போது வயது 80.

ஹெட் சர்வேயர்

கடந்த 2007 ஆம் ஆண்டு இவர் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் திருச்சி குண்டூர் பகுதியில் தனது பெயரில் உள்ள மனை மற்றும் தனது இளைய மருமகள் பெயரில் உள்ள இரண்டு மனைகள் ஆகியவற்றை சப் டிவிஷன் செய்து தனிப்பட்ட வாங்குவதற்கு முயற்சி செய்தார். பட்டா வாங்கிய பின்னர் அதில் வீடுகள் கட்டுவதற்கு திட்டமிட்டு இருந்தார். இதற்காக மனையை அளந்து பட்டா வழங்குவதற்கு விண்ணப்பம் செய்திருந்தார். அதற்கான அரசு கட்டணத்தையும் செலுத்தி இருந்தார். ஆனால் எந்தவித பதிலும் வராததால் திருச்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஹெட் சர்வேயராக பணியாற்றி வந்த கணேச மூர்த்தி என்பவரை அணுகினார்.

அப்போது கணேச மூர்த்தி உங்களது மனு எனது மேஜை டிராயரில் தான் இருக்கிறது. இதனை உடனடியாக அனுப்ப வேண்டும் என்றால் எனக்கு ஆயிரம் ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என கூறினார். லஞ்சம் கொடுக்க விரும்பாத சக்கரவர்த்தி இது பற்றி திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் அலுவலகத்தில் புகார் செய்தார்.

ரூ.1000 லஞ்சம் வாங்கினார்

இதனை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி. ராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர் சக்திவேல் ஆகியோர் இது பற்றி ஒரு வழக்கு பதிவு செய்தனர். பின்னர் ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை சக்கரவர்த்தியிடம் தந்து அதனை லஞ்சம் கேட்ட கணேச மூர்த்தியிடம் கொடுக்கும்படி கூறினார்கள். அதன்படி சக்கரவர்த்தி கணேச மூர்த்தியிடம் லஞ்ச பணத்தை கொடுத்தபோது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

3 ஆண்டு சிறைத்தண்டனை

கடந்த 2007 ஆம் ஆண்டு இந்த சம்பவம் நடைபெற்றது. லஞ்சம் வாங்கிய போது கணேச மூர்த்திக்கு வயது 52. தற்போது அவருக்கு வயது 67 ஆகிறது.15 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கில் இன்று திருச்சி ஊழல் மற்றும் கண்காணிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. கணேசமூர்த்தி மீதான லஞ்ச குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு மூன்று ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் ரூ. 20 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்ட தவறினால் மேலும் ஆறு மாதம் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார்.

Updated On: 25 Nov 2022 9:58 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!