/* */

திருச்சியில் வழிப்பறி செய்த இருவர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது

திருச்சியில் வழிப்பறி செய்த இருவர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

திருச்சியில் வழிப்பறி செய்த இருவர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது
X

திருச்சி வயர்லெஸ் சாலையில் கடந்த 11ஆம் தேதி நடந்து சென்ற ஒருவரிடம் கத்தியை காட்டி மிரட்டி தர்மா என்கிற தர்மசீலன் (வயது22) ரூ 500 பணத்தை வழிப்பறி செய்து கொண்டு ஓடினார். ஏர்போர்ட் போலீசார் அவரை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இவர் மீது ஏற்கனவே ஒரு கொலை வழக்கு நிலுவையில் உள்ளது.

இதேபோல பொன்மலைப்பட்டி சாலையில் நடந்து சென்ற ஒருவரிடம் கத்தியை காட்டி மிரட்டிய அப்துல் நசீர் (23) கத்தியை காட்டி மிரட்டி ரூ.1000 வழிப்பறி செய்து கொண்டு ஓடினார். இவர் மீது ஏற்கனவே பாலக்கரையில் செல்போன் திருட்டு உள்பட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன .இவரும் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த இருவரும் சிறையில் இருந்து வெளியே வந்தால் மீண்டும் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் என்பதால் அவர்கள் இருவரையும் தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்து ஒரு வருடம் எந்தவித விசாரணையின்றி சிறையில் அடைக்க திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவிட்டார். இதற்கான உத்தரவு நகல் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள இருவரிடமும் இன்று வழங்கப்பட்டது.

Updated On: 22 April 2022 4:04 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலி உறவுகளை காலி செய்யுங்கள்..! வேண்டாத சுமைகள்..!
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை விர்ர்ர்... 5 நாட்களில் 70 பைசா உயர்வு
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  4. ஈரோடு
    ஈரோடு அட்வகேட் அசோசியேசன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
  5. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...
  6. வீடியோ
    🔴LIVE : சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட்! ஆளுநர் RN.ரவி சூசக...
  7. ஈரோடு
    ஈரோடு அரசு பல்நோக்கு மருத்துவமனையில் வெப்ப நோய் சிகிச்சைக்கு சிறப்பு...
  8. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  9. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  10. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...