/* */

சொத்து வரி உயர்வை கைவிட நகர்நல சங்கங்களின் கூட்டமைப்பு, மேயரிடம் மனு

சொத்து வரி உயர்வை கைவிட நகர்நல சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மேயரிடம் மனு அளிக்கப்பட்டது.

HIGHLIGHTS

சொத்து வரி உயர்வை கைவிட நகர்நல சங்கங்களின் கூட்டமைப்பு, மேயரிடம் மனு
X
சொத்து வரி உயர்வை ரத்து செய்யக்கோரி திருச்சி மாநகராட்சி மேயரிடம் குடியிருப்போர் நல சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மனு கொடுக்கப்பட்டது.

திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மேயர் அன்பழகன் தலைமையில் ஆணையர் முஜிபுர் ரகுமான் மற்றும் அதிகாரிகள், துணைமேயர் திவ்யா ஆகியோர் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார்கள்.

அப்போது திருச்சி மாநகர குடியிருப்போர் நல சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் மற்றும் நிர்வாகிகள் மேயர் அன்பழகனிடம் மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் திருச்சி மாநகரில் தமிழக அரசின் அறிவிப்பிற்கு இணங்க 600 சதுர அடிக்கு மேல் உள்ள கட்டிடங்களுக்கு 50% ,75% ,100% என சொத்து வரி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி பொதுமக்களின் கருத்து என்ன என்பதை அறிவதற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சி மாநகரில் சொத்து வரி உயர்த்தப்பட்டு இருப்பது தவறான செயலாகும்.

மாநகராட்சிக்கு வணிக நிறுவனங்கள் இலட்சக்கணக்கில் வரி பாக்கி வைத்துள்ளன. மேலும் மாநகராட்சி கட்டிடங்களில் வணிகம் செய்பவர்களும் நிலுவைத்தொகை வைத்து இருக்கிறார்கள். அவர்களிடம் முதலில் மாநகராட்சி நிர்வாகம் நிலுவைத் தொகையை வசூல் செய்ய வேண்டும்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனாவால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து தற்போதுதான் ஓரளவு மீண்டு வரும் நேரத்தில் 100 சதவீத சொத்து வரி உயர்வை என்பது ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே அதனை திரும்பப் பெற வேண்டும். மேலும் கிராம ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நடத்துவது போல் மாநகராட்சி பகுதிகளில் மக்களின் நேரடி பங்களிப்பை தெரிவிப்பதற்காக வார்டு சபை கூட்டம் நடத்த வேண்டும். அதற்கான குழுவையும் அமைக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

Updated On: 25 April 2022 12:09 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்