/* */

திருச்சியில் சிறுமிக்கு திருமணம்- தாலி கட்டிய இளைஞர் தப்பி ஓட்டம்

திருச்சியில் சிறுமியுடன் திருமணம் செய்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.வாலிபரின் தந்தை கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

திருச்சியில் சிறுமிக்கு திருமணம்- தாலி கட்டிய இளைஞர் தப்பி ஓட்டம்
X

திருச்சி எடமலைப்பட்டி புதூரை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 50).இவரது மகன் வீரமணி என்கிற வாலு(27). இவருக்கும், லால்குடிபகுதியை சேர்ந்த 15 வயது சிறுமிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. கடந்தமாதம் 17-ம் தேதி வீரமணிக்கும், அந்தசிறுமிக்கும் குடும்பத்தார் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

இந்த நிலையில் திருமண வயதை எட்டாத சிறுமிக்கு திருமணம் நடந்த தகவல் தெரிந்து, திருச்சி மாவட்ட சமூக நல அலுவலர் தமிமுன்னிஷா விசாரணை மேற்கொண்டார். பின்னர் இது குறித்து திருச்சி கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தவேத வல்லி வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தார்.

இந்நிலையில் எடமலைபட்டிபுதூரில் உள்ள வீரமணி வீட்டிற்கு இன்ஸ்பெக்டர் ஆனந்த வேதவல்லி தலைமையிலான போலீசார் சென்றனர். சிறுமியின் திருமணத்திற்கு உடந்தையாக இருந்ததாக வீரமணியின் தந்தை லட்சுமணனை போலீசார் கைது செய்தனர். சிறுமிக்கு தாலிகட்டிய வாலிபர் வீரமணி, போலீசார் தேடுவதை அறிந்து தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

இதையடுத்து சிறுமியை மீட்ட போலீசார் திருச்சியில் உள்ள பெண்கள் காப்பகத்தில் அவரை தங்க வைத்து உள்ளனர்.

Updated On: 1 Oct 2021 5:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலி உறவுகளை காலி செய்யுங்கள்..! வேண்டாத சுமைகள்..!
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை விர்ர்ர்... 5 நாட்களில் 70 பைசா உயர்வு
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  4. ஈரோடு
    ஈரோடு அட்வகேட் அசோசியேசன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
  5. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...
  6. வீடியோ
    🔴LIVE : சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட்! ஆளுநர் RN.ரவி சூசக...
  7. ஈரோடு
    ஈரோடு அரசு பல்நோக்கு மருத்துவமனையில் வெப்ப நோய் சிகிச்சைக்கு சிறப்பு...
  8. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  9. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  10. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...