/* */

சர்வதேச சக்கர நாற்காலி கூடைப்பந்து போட்டியில் வெற்றி பெற்றவருக்கு பாராட்டு

சர்வதேச சக்கர நாற்காலி கூடைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற திருச்சி வீரர் ரமேஷுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.

HIGHLIGHTS

சர்வதேச சக்கர நாற்காலி கூடைப்பந்து போட்டியில் வெற்றி பெற்றவருக்கு பாராட்டு
X

சர்வதேச சக்கர நாற்காலி கூடைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற திருச்சி வீரர் ரமேஷிற்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.

அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் கெளரவ தலைவரும் முன்னாள் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியுமான நீதியரசர் எம்.கற்பகவிநாயகம் வழிகாட்டுதலின்படி திருச்சியில் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் மற்றும் மாற்றம் அமைப்பின் சார்பில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த கூடைப்பந்து மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர் ரமேஷுக்கு பாராட்டு மற்றும் வாழ்த்துக்கள் தெரிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

நடுவில் இருப்பவர் தான் ரமேஷ்.

உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் கடந்த நவம்பர் மாதம் 6 ம்தேதி முதல் 11 ம் தேதி வரை நடைபெற்ற இந்தியாவின் முதல் சர்வதேச சக்கர நாற்காலி கூடைப்பந்து போட்டியில் கலந்து கொண்டு வெள்ளி பதக்கத்தை வென்ற திருச்சி மாவட்டம் தொட்டியம் பகுதியை மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர் ரமேஷ் மற்றும் அவரது குழுவினர் தமிழகத்திற்கும் திருச்சி மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

தமிழகதிற்கும் திருச்சி மாவட்டதிற்கும் பெருமை சேர்ந்த ரமேசை பாராட்டும் நோக்கில் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் மற்றும் மாற்றம் அமைப்பின் சார்பில் பாராட்டு நினைவுபரிசு மற்றும் வாழ்த்துக்கள் தெரிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் கெளரவ தலைவரும் சட்ட ஆலோசகருமான வழக்கறிஞர் எஸ். அண்ணாதுரை கலந்து கொண்டு நினைவு பரிசு வழங்கி வாழ்த்து மற்றும் பாராட்டுகளை தெரிவித்தார். அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் திருச்சி மாவட்ட செயலாளர் ரோட்டரியன் நாகராஜன் வடிவேல் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர் ரமேஷிற்கு ஊக்க தொகை வழங்கி வாழ்த்தி பாராட்டினார்.

பயிற்சியில் ஈடுபட்ட ரமேஷ்.

சமூக ஆர்வலர் வழக்கறிஞர் இளங்கோ மற்றும் அமைப்பின் விளையாட்டு பிரிவு செயலாளரும் தடகள விளையாட்டு பயிற்சியாளருமான சுரேஷ் பாபு பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்நிகழ்வில் அமைப்பின் நிர்வாகிகள் இணைச் செயலாளர் அல்லி கொடி, அனுஷ்மா நந்தினி மைக்கேல், மேகா பிரணாவ் மற்றும் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் மாற்றம் அமைப்பின் நிர்வாகியும், நடிகருமான ஆர். ஏ. தாமஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மேலும் பல சாதனைகள் புரிய வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்நிகழ்வானது அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் திருச்சி மாவட்ட தலைவர் பொறியாளர்செந்தில்குமார் அலுவலகத்தில் நடைபெற்றது.

பாராட்டு தெரிவிக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரரான ரமேஷ் கூறும்போது திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்து தனது விடாமுயற்சியால் பல தடைகளை கடந்து பல்வேறு மாநில தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுளதாகவும் கடந்த மாதம் நொய்டாவில் நடைபெற்ற மாற்றுதிறனாளிகளுக்கான சர்வதேச கூடைப்பந்து விளையாட்டு போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் ரமேஷ் தான் டிப்ளமோ மற்றும் பி. எஸ். சி. பயோ கெமிஸ்ட்ரி படித்து விட்டு தற்போது கோவையில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருவதாகவும், தமிழக அரசு தனக்கு ஏதாவது அரசு பணி வழங்கினால் தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் பயன் அளிக்கும் என்றும் மேலும் பல போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடி நமது நாட்டிற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்க்க பயிற்சி செய்து வருவதாகவும் கூறினார்.

Updated On: 13 Dec 2022 8:41 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...