/* */

திருச்சியில் தொழில் போட்டியில் கொழுந்தியாளை வெட்டி கொலை செய்தவர் கைது

திருச்சியில் தொழில் போட்டி காரணமாக கொழுந்தியாளை வெட்டி கொலை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

திருச்சியில் தொழில் போட்டியில் கொழுந்தியாளை வெட்டி கொலை செய்தவர் கைது
X

கொலை செய்யப்பட்ட முத்துலட்சுமி.

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டியை சேர்ந்தவர் சிங்கதுரை. இவருக்கு கலைவாணி (வயது 34), கலைச்செல்வி (வயது 34), முத்துலட்சுமி (வயது 30) ஆகிய 3 மகள்கள் உண்டு. இவர்கள் 3 பேரும் திருச்சி அரசு மருத்துவமனை எதிரே உள்ள ஆபீசர்ஸ் காலனியில் தனித்தனியாக வியாபாரம் செய்து வருகிறார்கள். கலைவாணி கம்பங்கூழ் வியாபாரமும், கலைச்செல்வி ஜூஸ் கடையும், முத்துலட்சுமி இளநீர் வியாபாரமும் செய்து வந்தனர்.

இதில் முத்துலட்சுமியின் கணவர் கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து சென்று விட்டார். இதனால் அவர் தனது தந்தை சிங்கதுரையுடன் சேர்ந்து இளநீர் வியாபாரத்தை கவனித்து வந்தார்.

இந்தநிலையில் தொழில் போட்டி காரணமாக அக்காள் கலைச்செல்விக்கும், முத்துலட்சுமிக்கும் இடையே அடிக்கடி தகராறு நடைபெற்று வந்தது. கடந்த 6-ந் தேதி மாலை கலைச்செல்வி, அவரது கணவர் நாகராஜ் ஆகியோர் சிங்கதுரையிடம் அங்கு இளநீர் கடை போடக்கூடாது என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

உடனே முத்துலட்சுமிதனது தந்தைக்கு ஆதரவாக நாகராஜை தட்டிக் கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த நாகராஜ் கையில் வைத்திருந்த அரிவாளால் முத்துலட்சுமியின் தலையில் ஓங்கி வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார். இதை பார்த்த அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த அரசு மருத்துவமனை போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து, நாகராஜ், கலைச்செல்வி ஆகியோரை கைது செய்தனர். இந்த நிலையில் அரசு மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வந்த முத்துலட்சுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து இந்த வழக்கை அரசு மருத்துவமனை போலீசார் கொலை வழக்காக மாற்றம் செய்து உள்ளனர்.

Updated On: 9 Feb 2022 4:38 PM GMT

Related News