/* */

திருச்சியில் போலீஸ் ரோந்து வாகன கண்ணாடியை உடைத்த நடிகர் அஜித் ரசிகர்

திருச்சியில் போலீஸ் ரோந்து வாகன கண்ணாடியை உடைத்த நடிகர் அஜித் ரசிகரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

HIGHLIGHTS

திருச்சியில் போலீஸ் ரோந்து வாகன கண்ணாடியை உடைத்த நடிகர் அஜித் ரசிகர்
X

நேற்று முன்தினம் நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு கோட்டை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருச்சி இ.பி.ரோட்டில் நடிகர் அஜித் ரசிகர்கள் சிலர், பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ள வலிமை திரைப்படத்தை வரவேற்று பிளக்ஸ் பேனர் வைத்துக் கொண்டிருந்தனர்.

இதை பார்த்த ரோந்து போலீசார், பொது இடத்தில் அனுமதியின்றி பிளக்ஸ் பேனர் வைக்கக்கூடாது என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருப்பதாகவும், எனவே பிளக்ஸ் பேனர் வைக்க கூடாது என்று தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ஒரு ரசிகர் போலீஸ் ரோந்து வாகனத்தின் முன்பக்க கண்ணாடியை ஓங்கி கைகளால் அடித்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதில் வாகனத்தின் முன்பக்க கண்ணாடி உடைந்து சேதமடைந்தது. இது குறித்த புகாரின்பேரில் கோட்டை போலீசார் விசாரணை நடத்தி, தப்பி ஓடிய அஜித் ரசிகரை தேடிவருகிறார்கள். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 2 Jan 2022 6:04 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...